Header Ads



இன்றுமுதல் தண்ணீர், போத்தலுக்கும் புதிய சட்டம்

சந்தையில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல்கள் இன்றுமுதல் புதிய சட்ட நடைமுறை ஒன்று அமுல்படுத்தப்படுகின்றது.

இந்த புதிய சட்ட அமுலாக்கத்தின்படி  SLS தரச் சான்றிதழ் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தயாரிப்புகள் அனைத்திற்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், அதனை இதுவரை அமுல்படுத்தாத வர்த்தகர்கள் தமது தயாரிப்புகளுக்க்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குடிநீர் போத்தல்களுக்கும் SLS தரச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இனி போத்தல்களில் தமது தயாரிப்பின் SLS தரம் கட்டாயமாக பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம், இன்றுமுதல் அமுலாக்கப்படுகின்றது.

இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையினரால் கடந்த வருடம் 59 குடிநீர் போத்தல்களை தயாரிக்கும் நிறுனங்களின் குடிநீர் பரிசோதிக்கப்பட்டதுடன், அவற்றில் 29 நிறுவங்களின் தயாரிப்புகள் உரிய தரத்தில் இல்லாமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.