Header Ads



அஹமதி நெஜத், மீண்டும் போட்டியிடக்கூடாது - அயதுல்லா அலிகமனே

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இரானின் முன்னாள் அதிபர் முஹமத் அஹமதிநெஜத் போட்டியிட கூடாது என்று இரானில் உள்ள அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமனே தெரிவித்துள்ளதாக இரானிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

அஹமதிநிஜாத் போட்டியிடுவது, அவர் நலனுக்கு அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்த்து அல்ல என்று அவரிடம் கமனே கூறியதாகக் கூறப்படுகிறது. இது அஹமதிநிஜாத்தை தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது.

2009 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் தேர்தலில் இரண்டாவது முறையாக வென்றது, பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியது.

ஆனால், அஹமதிநிஜாத் போட்டியிடுவதுதான், கடும்போக்கு பழமைவாதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கிடைக்கும் ஒரே ஒரு சாத்தியக்கூறான சிறந்த வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் அஹமதிநெஜத் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவரது சமீபத்திய பேச்சுக்களில் அதனை மறைமுகமாக கூறி இருக்கிறார்.

1 comment:

  1. அஹமதிநெஜத் ஷியா வாதிகளின் போக்கில் இருந்து விளகிய ஒரு சிறந்த முஸ்லிம் என்பதால் தான் இந்த கொலைகாரன் ஷியா அயதுல்லா அலிகமனே அவரைை முன் கூட்டியே தடுத்து கொண்டு இருக்கிறான் இதுதான் காரணம்

    ReplyDelete

Powered by Blogger.