சரத் பொன்சேக்காவுக்கு, கமால் குணரட்ன பதிலடி
யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது என மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார்.
படை வழியாக நந்திக்கடல் என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை அண்மையில் கமால் குணரட்ன வெளியிட்டிருந்தார். இந்த நூலில் யுத்த இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள கமால் குணரட்ன தாம் எந்தவொரு காலத்திலும் யுத்த இரகசியங்களை வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பிரபல்யத்தை தேடிக் கொள்ளும் நோக்கில் தான் நூல் எழுதவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் மனிதாபிமான மீட்புப் பணிகளில் ஈடுபட்ட படையினரை புலம்பெயர்தரப்புக்கள் யுத்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருவதாகவும் அதனை ஆங்கிலத்தில் தெளிவுபடுத்தும் நோக்கிலும், வறிய பெற்றோர்களே அதிகளவில் படையில் தமது பிள்ளைகளை இணைத்துள்ளதாகவும் அவர்களுக்கு சிங்களத்தில் யுத்தம் பற்றிய தகவல்களை வழங்கவுமே இரண்டு மொழிகளிலும் நூல் வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்த இரகசியங்களை அம்பலப்படுத்தும் இழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை எனவும் ஈடுபடப் போவதில்லை எனவும், ஒரு நாளும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் மனித உரிமை மீறல்களையும் அப்பாவி பொது மக்களையும் கொன்றுவிட்டு அவற்றை யுத்த ரகசியம் என்றும் அவற்றை வெளியிட முடியாது என்றால் இறைவனுடைய பார்வையில் அதுதான் இழிவான செயலாகும் . இலங்கை அரசாங்கத்திற்கு என்னவொ இவர்கள் war hero ஆக இருக்கலாம் .
ReplyDeleteGOOD MAN
ReplyDelete"எங்கப்பன் குதிருக்குள் இல்லை" யுத்தக் குற்றம் நடந்துள்ளது என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
ReplyDeleteThere not any war crime happend.We restpect our soldiers.
ReplyDelete