முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தாமதம் - சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் முறையற்ற எல்லை நிர்ணயங்களை மீள் நிர்ணயம் செய்யுமாறும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக்குழுவின் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தும் அது பயனற்றுப் போயுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக்குழு விசாரணைகளைப் பூர்த்தி செய்து எல்லைகளை மீள்நிர்ணயம் செய்து பட வரைபுகளுக்காக எல்லை நிர்ணயங்களை நில அளவைத் திணைக்களத்துக்கு சமர்பித்துவிட்டமையே இதற்குக் காரணமாகும்.
சுமார் 200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை விசாரித்து உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து படவரைபுகளுக்காக நில அளவைத் திணைக்களத்திடம் சமர்ப்பித்திருப்பதாக எல்லை நிர்ணய விசாரணைக்குழுவின் தலைவர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
எல்லை மீள்நிர்ணயங்கள் தொடர்பான பூரண அறிக்கை எதிர்வரும் அக்டோபர் மாத நடுப்பகுதியில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் எல்லைகளின் விபரங்கள் அக்டோபர் மாதம் இறுதியில் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 31 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எல்லை நிர்ணய முறைப்பாட்டு விசாரணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸைச் சந்தித்து முறையற்ற எல்லை நிர்ணயங்களால் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான எல்லைகள் திருத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் அக்கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட எல்லை நிர்ணயங்கள் நில அளவைத் திணைக்களத்திடம் பட வரைபுகளுக்காக கையளிக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலத்தொடர்பு, சனத்தொகை, இன விகிதாசாரம் என்பன கவனத்திற்கு கொள்ளப்படாது ஒரு சமூகத்தின் நலன் கருதி உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம்கள் தமது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.
திருகோணமலை, கம்பஹா, புத்தளம் மற்றும் கண்டி மாவட்டங்களில் மேற்கொள்ள எல்லை நிர்ணயங்கள் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் தெளிவுப்படுத்தினார். புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் நகரசபை, புத்தளம் பிரதேச சபை, கற்பிட்டி பிரதேச சபை, ஆராய்ச்சிக்கட்டு பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச சபை, சிலாபம் நகரசபை, சிலாபம் பிரதேச சபை, நாத்தாண்டியா பிரதேச சபை என்பவற்றினாலும் கண்டி மாவட்டத்தில் அக்குறணை பிரதேச சபை, பாத்தாஹேவாஹட்டை பிரதேச சபை, பாத்ததும்பறை பிரதேச சபை என்பவற்றினாலும் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், கந்தளாய் பிரதேச சபைகளினதும் எல்லை நிர்ணயங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமெனவும் அமைச்சர் அசோக பீரிஸிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அக்குறணை பிரதேச சபையின் வட்டார எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அக்குறணை பிரதேச சபைக்கு 11 முஸ்லிம் உறுப்பினர்களை பெற்றுக் கொள்ளும் வகையில் வட்டார எல்லைகள் வகுக்கப்படுமென உறுதி வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது 9 முஸ்லிம் பிரதிநிதித்துவமும் 9 சிங்கள பிரதிநிதித்துவமும் பெற்றுக் கொள்ளும் வகையிலே வட்டார எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அமைச்சர் ஹக்கீம் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வைத்த முறைபாடுகளுக்கு முன்பே வட்டார எல்லைகள் வகுக்கப்பட்டு மீள் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தாமதத்தினால் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லை நிர்ணயங்களின்படியே உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
விடிவெள்ளி ARA.Fareel
அடே முட்டக்கூட்டங்களா நீங்கள் எல்லோரும் அது வரைக்கும் எங்கு செத்து தொலைந்தீங்க,இது பற்றி அடிக்கடி எவ்வளவு செய்திகள் வெளியாகிக்கொன்டருந்த்தே?????
ReplyDelete" முஸ்லிம் தலைவர்கள்" ? இதுவே பிழையான ஒரு கருத்து , இவர்கள் சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளே தவிர முஸ்லிம் தலைவர்களல்ல.
ReplyDeleteVoice, sariyaka sonneerkal,engalaipponra thengai madayarkal irukkum varai avarkal appadithan irupparkal.
ReplyDelete