மன்னார் பள்ளிவாசல் பிட்டி, பாடசாலை திறப்புவிழா
-இமாம் றிஜா-
மன்னார் மானிலத்தின் எழில் கொஞ்சும் மன்/மருதோன்டுவான் வேளாகுளம் பள்ளிவாசல் பிட்டி அ.மு.க.பாடசாலை கட்டிட திறப்புவிழா நாளை 29.09.2016 பி.ப.2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட உள்ளதாக மன்னர் சூறா சபை தலைவர் மௌலவி அஸ்ரப் முபாரக் தெரிவித்தார்.
கலாசாலை அதிபர் திருமதி றோகினி பீற்றர் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கெளரவ அமைச்சர் அல்ஹாஜ் றிசாட் பதியுதீன். வடமாகாண அமைச்சர். ப.டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்.மடு வலய கல்விப்பணிப்பாளர் T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக மன்னார் சூறா சபை தலைவர் மௌலவி முபாரக். மற்றும் M.r.m.கஜ்ஜிக் போன்றோர் கலந்து சிறப்பபிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
CMக்கு நன்றி
ReplyDelete