Header Ads



மஹிந்தவின் புதிய கட்சி தயார் - இன்று இரவு விஷேட சந்திப்பும் நடந்துமுடிந்தது

கூட்டு எதிர்க் கட்சியின்  புதிய அரசியல் கட்சிக்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவமாக கொண்ட  புதிய கட்சியில் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எதிர் கொள்வதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

கட்சியின் நிறம் மற்றும் சினனத்தின் இரகசிய தன்மையை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என  கூட்டு எதிர் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பாதுகாப்பு படைகளில் ஓய்வுப்பெற்ற முக்கிய அதிகாரிகளை தேர்தல் நடவடிக்கைகளில் களமிறக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு எதிர்க்  கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் விஷேட சந்திப்பு  இன்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது. இதன் போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. 

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு ஆட்சி மாற்றத்திற்கான ஆரம்பமாக மாற்றுவது? அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுப்பது தொடர்பான விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

குறிப்பாக புதிய கட்சியை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தல் மற்றும் அதனை பிரதான கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் மாற்றுதல் மற்றும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதேவேளை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்  பங்காளி கட்சிகள் புதிய கட்சி ஒன்றை அமைத்து அதன் ஊடாக எதிர் வரும் தேர்தல்களில் போட்டியிடுவோம்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்விற்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புதிய கட்சி குறித்து தெளிவுப்படுத்துகையில் குறிப்பிட்டார்.  

கூட்டு எதிர்க் கட்சியை  அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டிய தேவை தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.  

 கட்சியின் சின்னம் மற்றும் நிறம் என்பவை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.