"தமிழ் கூட்டமைப்பின் அச்சத்தினால், முஸ்லிம்களை நல்லாட்சி அரசு ஓரம் கட்டுகிறது"
ஐ நா செயலாளர் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமைகளை தனியாக சந்திப்பதற்கு ஐ தே க அரசு ஏற்பாடு செய்யாததன் மூலம் இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கிறதா என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி கேள்வி எழுப்பினார்.
இலங்கை வந்துள்ள ஐ நா செயலாளரை சந்திக்க முஸ்லிம் ட்சி தலைவர்களுக்கு தனியாக நேரம் ஒதுக்க்ப்படாமை சம்பந்தமான ஊடகவியலாளரின் கேள்விக்கு அவர் தொடாந்து கூறியதாவது,
இந்த நாட்டில் ஆயுதம் தாங்கி போராடாமலேயே பாரிய உயிர், உடமை இழப்புக்களுக்கு முகம் கொடுத்த ஒரேயொரு இனம் முஸ்லிம்களாகும். அவர்கள் தனியாக பிரித்துப்பார்த்து கொல்லப்பட்டதோடு வடக்கிலிருந்து அனைத்தும் உறிஞ்சப்பட்டதன் பின் வெளியேற்றப்பட்டார்கள் என்பதன் மூலம் முஸ்லிம்கள் தனியான இனம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அப்படியிருந்தும் முஸ்லிம் அரசியல் கட்சித்தலைவர்களின் தனித்தரப்பொன்றை பாங்கி மூனுடன் தனியாக சந்திக்க வைக்க இந்த அரசுக்கு முடியாமல் போனதன் மூலம் ஐ தே க தலைமையிலான அரசு முஸ்லிம் சமூகத்தின் முதுகில் குத்தியுள';ளதாகவே தெரிகிறது. இதற்கு காரணம் அரசாங்கம் த தே கூட்டமைப்பின் முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்துள்ளதா என கேட்கின்றோம்.
பாங்கிமூனை முஸ்லிம் கட்சிகளின் தனித்தரப்பு சந்தித்தால் வட மாகாண முஸ்லிம்களுக்கு த தே கூட்டமைப்பினர் செய்யும் துரோகங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதாலும் அரசியல் தீர்வில் முஸ்லிம்களும் பங்காளிகள் என்பதை ற்றுக்கொள்ள வேண்டி வரும் என்ற த தே கூட்டமைப்பின் அச்சத்தின் காரணமாக அரசாங்கம் முஸ்லிம் தரப்பை ஓரம் கட்டியுள்ளதாகவே நாம் பார்க்கிறோம். இத்தனைக்கும் இந்த நாட்டு முஸ்லிம்களில் 98 வீதமானோர் நல்லாட்சிக்கு வாக்களித்தும் இந்த நிலைமை ஏற்பட்டமை வெட்கக்கேடானதாகும்.
இவ்வாறு முஸ்லிம் தரப'பு ஓரம் கட்டப்பட்டமைக்கு இலங்கையில் உள்ள ஐ நா காரியாலயத்தின் மீது பழி பாட்டு அரசு தப்பிக்க முடியாது. ஏனென்றால் அரசாங்கம் இதனை கோரியிருந்தால் நிச்சயம் நேரம் வழங்கப்பட்டிருக்கும்.
ஆகவே உடனடியாக இது விடயத்தில் பிரதமர் தலையிட்டு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசியலில் செயற்படும் முஸ்லிம் கட்சிகளைச்சேர்ந்த 'அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பை' ஐ நா செயலாளரை தனியாக சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் வடக்கு கிழக்கை இணைக்காத அரசியல் தீர்வு குறித்தும் அவரிடம் கூறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என உலமா கட்சி பிரதமர் ரணிலை கேட்டுக்கொள்கிறது
உலகத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டம் தீட்டும் அமைப்பில் அங்கம் வகிக்கும் அவர் எவ்வாறு முஸ்லிம்களுக்கு உதவி செய்வார்
ReplyDelete