பாரதீய ஜனதா ஆட்சி நடத்தும், இந்தியாவில் இதுதான் கதி
ஜார்க்கண்ட் அரசு மருத்துவமனையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தரையில் உணவு பரிமாறிய, ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது; தலைநகர் ராஞ்சியில், அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, கை எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற, முன்னி தேவி, 46, என்ற பெண், சமீபத்தில் வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் கையில் மாவுக்கட்டு போடப்பட்டது.
மருத்துவமனை கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அவரிடம், தட்டு இல்லாததால், தரையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. அங்கு வந்த ஒருவர், இந்த காட்சியை, மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஜார்க்கண்ட் ஐகோர்ட், தானாக முன்வந்து விசாரித்து, இது குறித்து நடவடிக்கை எடுக்கவும், பதில் அளிக்கவும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மாநில சுகாதாரத் துறை நியமித்த, மூன்று பேர் அடங்கிய குழு, விசாரணை நடத்தியது.ஒழுங்கு நடவடிக்கை'மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அனைத்தும், 30 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டவை.
அதன்பின், நோயாளிகளே தங்களுக்கு தேவையான பாத்திரங்களை வீட்டில் இருந்து எடுத்து வருவதால், புதிதாக பாத்திரங்கள் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆனாலும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தரையில் உணவு பரிமாறிய ஊழியர், பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Post a Comment