பாடசாலைக்கு வரும் தாய்மார், எந்த ஆடையுடன் வரவேண்டும் - கொழும்பில் சூடுபிடிக்கும் விவாதம்
-BBC-
இலங்கையிலுள்ள ஆண்கள் பள்ளிக்கூடத்தின் அறிவிப்பு பலகையில் காணப்படும் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ற விவரங்கள் சமூக வலைதளங்களில் சூடான விவாதங்களை எழுப்பியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பிலுள்ள மக்கள் இது தொடர்பாக ஏன் கோபமடைந்துள்ளனர் என்பதை பிபிசியின் ஆயிஷா பெரேரா விளக்குகிறார்.
இதனை பார்த்தவுடன், இக்கால அழகை விவரிக்கும் தரமற்ற பத்திரிகையின் பக்கம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை மன்னித்துவிடலாம்.
கொழும்பின் உயர்தர தனியார் பள்ளிகளில் ஒன்றான புனித ஜோசப் கல்லூரியில் அனைவரும் பார்க்க, வைக்கப்பட்டிருந்த அந்த அறிவிப்பு பதாகையில் எந்த எழுத்துக்களும் இல்லை.
மாறாக, வேறுபட்ட உடைகளில் 16 பெண்களின் படங்களை கொண்டிருக்கும் அதில், பாதி படங்களுக்கு சரி என்ற அடையாளமும், மீதி பாதி படங்களுக்கு தவறு என்ற அடையாளமும் வழங்கப்பட்டிருப்பதை காணலாம்.
இது விபத்தாய், தற்செயலாக நிகழ்ந்தவிட்ட ஒன்றல்ல. கொழும்பில் இப்போது இது நாகரீகமும் அல்ல.
மாறாக, பெண்கள் இந்த பள்ளிக்கூடத்திற்குள் ஆசிரியர்களை சந்திக்க வரும்போது அல்லது தங்களுடைய குழந்தைகளை பள்ளியிலிருந்து கூட்டிச்செல்ல வரும்போது, என்ன உடைகளை அணியலாம், எவற்றை அணியக் கூடாது என்பதை விளக்குகின்ற அறிவிப்பு பலகை.
பாரம்பரிய சேலை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல உருவின்றி தயாரிக்கப்பட்ட ஆடை அணிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் ஆடைகள் போல தோன்றுபவை அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்படாதவற்றில் வார் பட்டை மேலுடைகள், குட்டை பாவாடைகள்,மற்றும் கையில்லாத ஆடைகள் அடங்குகின்றன.
அறிவிப்பு பதாகையின் முதல் பார்வை தரமற்ற பத்திரிகையின் பக்கத்தை போல தோன்றும்
புனித ஜோசப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் ஒரு படத்தை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய பிறகு இது பற்றிய கோபம் அனைவரையும் தொற்றிக் கொள்ள தொடங்கியது.
பள்ளியின் வளாகத்திற்குள் நுழைகின்ற பெண்கள் அணிந்து வர வேண்டிய கட்டாய ஆடை முறை பற்றி புனித ஜோசப் பள்ளியின் நிர்வாக ஊழியர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.
“பள்ளிக்குள் அவர்கள் வர வேண்டும் என்றால், அவர்கள் பொருத்தமான ஆடை அணிந்திருக்க வேண்டும்” என்று அந்த ஊழியர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது புனித ஜோசப் பள்ளியில் மட்டுமே நடைபெறுவதில்லை.
கொழும்பிலுள்ள இன்னொரு தனியார் கல்வி நிலையமான புனித பீட்டர் கல்லூரி வாயிலின் வெளியே இது போன்றதொரு அறிவிப்பு இருப்பதாக இந்த கல்வி நிலையமே உறுதிப்படுத்தியிருக்கிறது.
“இது மாணவர்களுக்கான பள்ளி மட்டுமே. ஓர் அறிவிப்பு வைத்திருப்பதால், பெண்கள் எதை அணியலாம் எவற்றை அணியக் கூடாது என்பது பெண்களுக்கு தெரிந்திருக்கும்” என்று அலுவலக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கு கட்டுப்படாத பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுவிடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயங்கள் குறித்து சமூகத்தளங்களில் பல வாதப்பிரதிவாதங்கள் தோன்றியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கட்டாயம் அமுல் படுத்தப்பட வேன்டிய விடயம். சில பாடசாலைகளுக்கு தாய்மார் வீட்டில் அணியும் (நைட்டி போன்ற)ஆடையுடன் கேவலமாக வருவதை கண்டிருக்கிறேன்.
ReplyDeleteKudos to St Peter's and St Joseph College administrations.
ReplyDeleteஇதே மாதிரி முஸ்லிம் பாடசாலைகளிலும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் , பெற்றோர்கள்
பாடசாலைக்கு இவ்வாறு தான் வரவேண்டும் என்று சொன்னால் எப்படியிரிக்கும்?
அவர்களுக்கும் மிக நன்றாகத்தான் இருக்கும்-அவர்களின் கலாசாரப்படி இருந்தால்
ReplyDeleteWHERE IS ISLAMIC DRESS CODE ON THAT PICTURE??
ReplyDelete