Header Ads



மரண ஓலங்களால், கண்ணீர் வடிக்கும் காஷ்மீர்


காஷ்மீரில் நேற்று ராணுவ முகாம் மீது நடத்திய தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதேவேளையில் காஷ்மீரில் ராணுவத்தால் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதையும், பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்பட்டதையும் பொது சமூகம் பேச வேண்டும்.

புர்ஹான் வாணி கொல்லப்பட்ட பிறகு மூண்ட கலவரத்தில் 70 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 50 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, தடை செய்யப்பட்ட பெல்லட் குண்டுகளால் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் கண் பார்வை பறிக்கப்பட்டதையும், உடல் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானதையும் பேச வேண்டும்.

உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடியபோது காஷ்மீர் முஸ்லிம்களால் கொண்டாடப்படாமல், மரண ஓலங்களால் கண்ணீர் வடித்த தேசமாக காஷ்மீர் திகழ்ந்தது.

காஷ்மீர் என்பது இந்தியாவுக்கு சொந்தமான நாடு அல்ல, ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட நாடு,

ஒப்பந்தத்தில் கொடுத்த வாக்குறுதியை நயவஞ்சகத்தனமாக இந்திய அரசு பறித்துக்கொண்ட பிறகே காஷ்மீரில் வன்முறை உருவாகி வருகிறது.

வன்முறையை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தின் காரணமாக காஷ்மீரில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதைப்பற்றியும் பொது சமூகம் பேச வேண்டும்.

5 comments:

  1. கஷ்மீர் இந்தியா வுக்கோ பாகிஸ்தானுக்கோ சோந்தமில்லை அது தனி நாடாக மலரவேண்டும்.
    கஷ்மீர் க்கு உரிமை கோர இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குகம் எந்ததார்மீக உரிமையும்கிடையாது.

    ReplyDelete
  2. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹஶஸைன் என்ன செய்து கொண்டிருக்கிறார்?

    ReplyDelete
  3. We know wt they did in our country north n east.

    ReplyDelete
  4. Kashmir must be given autonomy. The atrocities and genocide of notorious Indian forces must be conveyed to the ICC and all these appalling criminals including prime minister Modi must be sentenced by the ICC immediately.

    ReplyDelete
  5. It just a drama by Indian PM they bombed their own Army camp because Pakistan PM to address in U.N. nextday about Kashmir issue.

    ReplyDelete

Powered by Blogger.