Header Ads



விக்கினேஸ்வரன் மன்னிப்பு கோர வேண்டும்

தமிழ் ஈழத்தை வழங்க முடியாமல் போனது தொடர்பில் கவலை அடைவதாக தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜே.ஆர்.ஜயவர்தன குறிப்பிட்டிருந்தாக வட.மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இது உண்மைக்கு புறம்பான விடயம். எனவே ஜே.ஆர்.ஜயவர்தனவின் மருமகனான பிரதமர் முன்னிலையில் நாட்டு மக்களுக்கு பொய்யான விடயங்களை தெரிவித்தமைக்காக வடக்கு முதலமைச்சர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தூய்மையா ஹெல உறுமைய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.