தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகம்பேர் பார்த்த விவாதம் - சூடு பறந்தது..!
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு இடையிலான முதல் தொலைக்காட்சி விவாதத்தில், அமெரிக்க அதிபர் ஆவதற்கு யாரிடம் சிறந்த குணம் உள்ளது என்பது தொடர்பில் டானல்ட் ட்ரம்பும் , ஹில்லரி கிளிண்டனும் நேருக்கு நேர் மோதினர்.அந்த விவாதத்தை தொலைக்காட்சி வாயிலாக பத்து கோடி பேர் பார்த்தனர். தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகம் பேர் பார்த்த விவாதமாக இது இருக்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின், முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளை இருதரப்பு பிரச்சார அணியினரும் பாராட்டியுள்ளனர்.
குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த போட்டியாளர்களான அவர்கள், தங்களது தகுதி குறித்த 90 நிமிட வாக்குவாதத்தில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர்.
ஹிலரி கிளிண்டன் அழுகிப்போன அரசியல் அமைப்பின் உறுப்பினர் என ட்ரம்ப் குற்றம் சுமத்தினார்.
தனது போட்டியாளரான ட்ரம்ப், டிவிட்டரில் வெளியாகும் ஒரு கருத்தை பார்த்து உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்றும் அணு ஆயுதங்களை ஏவ அதிபருக்கு தரப்படும் சங்கேதக் குறியீடுகளுக்கு அருகே கூட அவர் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
Watched the entire debate. Hilary excelled. Trump tried all his trump but bogged down badly. He has nothing new. He hangs behind trickle down economy of ex President Ronald Reagens. Hilary unmasked Trump's racism. His 6 time bankruptcy declaration. Tax evasion. Turn coat policies etc
ReplyDeleteTrump is no where close to Hilary in this debate. Cheers Hilary