பான் கீ முனிடம், முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளை கூறிய ஹக்கீம் - கொதித்தெழுந்த அமைச்சர் நிமல்
நல்லிணக்க செயற்பாடுகள், ஜெனீவா தீர்மானத்திற்க்குப் பின்னரான பொறுப்புக் கூறுதல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை என்பவற்றைப் பொறுத்தவரை நாட்டின் சகல இன மக்களுக்கும் நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐ.நா. செயலாளர் நாயகம் பென் கீ மூனிடம் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பென் கீ மூன் மற்றும் சபா நாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான ; இலங்கை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (2) முற்பகல் இடம்பெற்றபோதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு கூறினார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் முன்னிலையில் மேலும் தெரிவித்ததாவது,
இந் நாட்டின் பெரிய தேசிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்கும் நோக்கத்துடன், உத்தேச தேர்தல் சீர்திருத்தத்தின்போது தொகுதிகளை வரையறுத்து நிர்ணயிக்கும் விடயத்தில் உதாசீனாமாகவும், வெறுப்புடனும் நடந்துகொள்கின்றன எனவும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் பென் கீ மூனிடம் அமைச்சர் ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு சிறுபான்மை கட்சி இந்த விடயத்தில் தீவிரவாத போக்கை கடைபிடிப்பதாக குற்றஞ்சாட்டியபோது அவருக்கும் அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
குறிப்பாக ஜெனீவா தீர்மானத்தின்படி 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட சம்பவங்களை மட்டுமே கவனத்தில்கொள்வது என்பது, இந்நாட்டின் ஒரு சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் ஆகையால், இனப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து, அதிலும் குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் முன்னெடுக்கப்பட தொடங்கிய 1980 மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடந்த கொடூரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் உள்ளடங்களாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுவும் நல்லிணக்கத்துக்கு வழிகோலுவதாக அமையும்.
நல்லிணக்க செயற்பாடுகள், ஜெனீவா தீர்மானத்திற்க்குப் பின்னரான பொறுப்புக் கூறுதல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை என்பவற்றைப் பொறுத்தவரை நாட்டின் சகல இன மக்களுக்கும் நியாயம் கிடைக்கக் கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
யுத்தம் முடிவடைந்து சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் மீள் குடியேற்றத்தைப் பொறுத்தவரை நீண்டகாலை இடம்பெயர்ந்தோர், பின்னர் இடம்பெயர்ந்தோர் என்ற வேறுபாட்டை கவனத்திற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படாமல் அதற்கு வழிவகுத்த அனைத்து காரணிகளையும், பின்னணிகளையும் சீர்தூக்கிப் பார்த்து பாதிக்கப்பட்டவர்களிடத்தில் நிவாரணங்களும், இழப்பீடுகளும், மாற்றீடுகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பென் கீ மூன் கலந்துரையாடலில் பங்குபற்றிய கட்சித் தலைவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கையில்,
சபா நாயகர் தலைமையில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளின் தலைவர்களுடனான இச்சந்திப்பு மிகவும் திருப்திகரமாக இருந்தது. ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
பிரச்சினைக்குரிய விடயங்களில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சியினர் தங்களுக்கிடையில் பேசி சுமூகமான தீர்மானங்களுக்கு வரவேண்டும். எனது அவதானிப்புகள் மீது ஐ.நா. சபை கூடுதல் கவனம் செலுத்தும். நாட்டின் நல்லிணக்க செயற்பாட்டுகள் சகல தரப்பினரதும் இணக்கப்பட்டுடன் மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.
ஷபீக் ஹுஸைன்
அரசாங்க தரப்பு மினிஸ்டர்கள் ரக்ஹீமும் நிம்லும் இப்படி UN க்கு முன்னால் ஒரு கொள்கை இல்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டதால், மூன் விளங்கியுருப்பார் இவர்கள் எவ்வாறு தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்போகிறார்கள் என்று.
ReplyDeleteOK ok ungallukku vetry. mahelitchchi
ReplyDeleteThis is first time I heard Mr.SLMC leader spoke on behalf Muslims. How far this message is true? Any one can rectify this please?
ReplyDeleteNo any politician in our country think obout our COUNTRY ALWAYS OWN PARTY AND SELFISH ONLY.OUR COUNTRY HAVE NEWER GOOD FUTURE UNTIL THING THIS IS MY COUNTRY.
ReplyDeleteதமிழ் சமூகத்துக்கு வழங்கப்படுகின்ற தனித்துவமான சமூக அந்தஸ்து முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்படுகின்றதில்லை. அவ்வாறான புறக்கணிப்பு பற்றி எந்த முஸ்லிம் தலைமைகளும் பேசுவதாக இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன் ஐய்யா தலைமையில் தனியாக ஐ.நா. செயலாளர் நாயகத்தை தனியாக சந்தித்து அவர்களுக்கு வேண்டப்பட்டதையெல்லாம் அவர்கள் பேசுகின்றார்கள். அந்த சபையில் எந்தவொரு நிமலோ அல்லது விமலோ வரமுடியாது. ஆனால், இந்த முதுகெழும்பு இல்லாத முஸ்லிம் தலைமைகளுக்கு அவ்விதமாக தனியாக ஐ.நா. செயலாளர் நாயகத்தை சந்தித்துரையாட கூட ஒரு வாய்ப்பை பெறமுடியாதிருப்பதை எண்ணி நாங்கள் கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது. முஸ்லிங்கள் தொடர்பான இத்தகைய மெத்தனப் போக்குக்கு உடனடியாக நாங்கள் முடிவு கட்ட வேண்டும். இல்லாவிட்டால், முக்கிய பேச்சுவார்த்தைகளின்போது நிகழ்ச்சி நிரலில் கூட முஸ்லிங்களின் விடயம் இடம்பெறுமா என்பது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. இன்றைய நமது வக்கற்ற தலைமைகள் நல்லா பழகிட்டாங்கள். எல்லாம் முடிந்து நன்றியுரையும் கூறி கூட்டமர்வுகள் கலைந்த பிற்பாடு இடைவழியில் வைத்து கைகுழுக்கிவிட்டு ஒரு போட்டோவும் எடுத்து ஊடகங்களில் போட்டு மக்களை ஏமாற்றுவார்கள்.
ReplyDeleteThis just a joke to cheat the lublic
ReplyDeleteஇவனுகளுக்கெல்லாம் மறுமை கேள்வி கணக்கு அதெல்லாம் கிடையாது,ஏனென்றால் அவர்கள் மி்னிஸ்டர்கள் எப்படியோ தன்வயிறு வீங்க வேண்டும் தன் பேங்கு வீங்க வேண்டும் அது மட்டு்ம்தான் அவனுகளுக்கு தேவை,நாட்டில் ஏதாவது பிரச்சினை இருந்தால்தானே பார்லிமென்ட் போகலாம் அதற்கு எங்களைப்போன்ற மடையர்கள் நாங்கள் காத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லாஹு அக்பர் சொல்லவும் போட் போடவும் வழிகெட்டவர்களெ ஈமானை கொலை செய்தவர்களே என்னடா செய்யப்போறீங்க இந்த பிரச்சினைக்கு
ReplyDelete