Header Ads



முஸ்லிம்களுக்காக ஆஜராகிய கதீஜா உம்மா - நீதிகேட்ட வெலியமுன..!


(விடிவெள்ளி)

அம்­பா­றை மாவட்­டத்தின் அட்­டாளைச் சேனை பிர­தேச செயலாளர் பிரி­வுக்­குட்­­பட்ட ஒலுவில், அஷ்ரப் நகர் கிரா­மத்தில் இன்னும் இரா­ணு­வத்­தி­னரின் பிரசன்னம் இருப்­பது ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழாம், இக்கிராம மக்­களின் காணி­களை விடு­விப்­பது தொடர்­பி­லோ அல்­லது அவர்­க­ளது கோரிக்­கை­க­ளுக்­கேற்­ப மாற்றுக் காணி­களை வழங்­கு­வது தொடர்­­பிலோ ஆராய்ந்து மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறும் உத்­த­ர­விட்­ட­து.

அஷ்­ரப் நக­ரில் வாழ்­ந்த 69 முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்குச் சொந்­த­மான காணியை சுவீ­க­ரித்­து இரா­ணு­வத்­தினர் கைய­கப்­ப­டுத்­தி­ய­மைக்கு எதி­ராக அக­மது லெப்பை கதீஜா உம்மா என்­ப­வரால் உயர் நீதி­மன்­றத்தில் தொட­ரப்­பட்ட வழக்கு நேற்­றைய தினம் -26- விசா­ர­ணைக்கு வந்த போதே நீதி­ய­ர­­சர்­க­ளான சிசிர ஜே. டி ஆப்­ரூ, அனில் குண­வர்­தன மற்றும் பிர­சன்ன எஸ். ஜய­வர்­தன ஆகியோர் அடங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் குழாம் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­­துடன் இவ் வழக்­கை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திக­திக்கும் ஒத்­தி­வைத்­த­து.

இதன்­போது கருத்து வெளியிட்ட அரச தரப்புச் சட்­டத்­த­ர­ணி­, மனு­தா­ர­ரான கதீஜா உம்­மா­வுக்கு பிறி­தொரு இடத்தில் குடி­யி­ருப்­ப­தற்­கான வீட்­டி­னையும் காணி­யையும் வழங்க முடியும் என்று தெரி­வித்தார்.

எனினும் இதற்கு மனு­தாரர் தரப்பில் எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­ட­து.

இதன்­­போ­து மனு­தா­ரர்கள் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்டத்­த­ரணி ஜே.சி. வெலி­ய­முன நீண்ட கால­மாக இக் காணி­களை விடு­விக்கா­து இழுத்­த­டிக்­கப்­ப­டு­வது தொடர்பிலும் அங்கு இரா­ணுவத்­தி­னரின் பிர­சன்னம் இருப்­பது தொடர்­பி­லும் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன் கதீஜா உம்­மா­வுக்கு அவர் ஏற்­க­னவே வாழ்ந்த இடத்தில் அவ­ருக்­கு­ரிய காணியை வழங்­கு­வ­துடன் இடிக்­கப்­பட்ட அவ­ரது வீட்­டையும் கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் இன்றேல் வீடு , கிண­றுடன் கூடிய விவ­சா­யம் செய்­ய­க்­கூ­டிய இரண்டு ரூட் காணி­­யை வழங்க வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டி­னார். 

அத்­துடன்  இக் கிரா­மத்­தி­லுள்ள ஒரு பகுதி காணியில் வன இலாகா திணைக்­க­ளத்­தி­னால் இராணு­வத்­தி­னரின் உத­வி­­யுடன் தேக்கு மரம் பயி­ரி­டு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட்டு வரு­வது தொடர்பில் சுட்­டிக்­காட்­டி அதற்கு தமது எதிர்ப்­பினையும் வெளியிட்­டார். 

இதன்­போதே அரச தரப்பு சட்­ட­த்­த­ர­ணியை நோக்கி  இரா­ணுவ முகாம் அகற்­றப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் இராணுவத்தி­னரின் பிர­சன்னம் இருப்­பது ஏன் என நீதியரசர்கள் கேள்வி எழுப்­பி­னர்.

இந்த விடயம் தொடர்பில் மனு­தா­ரரின் கோரிக்­கையை கருத்திற் கொள்­ளு­மாறும் இரா­ணுவ பிரசன்னம் இருப்­பது தொடர்­பிலும் ஆராய்ந்து மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு அரச தரப்பு சட்­டத்­த­ர­ணிக்கு உத்­த­ர­விட்ட நீதி­யரசர் குழாம் இவ் வழக்­கை ஒக்டோபர் மாதம் 17 ஆம் திக­திக்கும் ஒத்­தி­வைத்­த­து.

1 comment:

  1. கதிஜா உம்மாவுக்கு எமது சலூட். இவரது இந்த முயறசிக்கு ஆதரவும் முடிந்தவர்கள் இவருக்கு தேவையான உதவியும் ஒத்தாசையும் வழங்க வேண்டும். அவரது சட்டத்தரணி வெளியமுனாவுக்க எமது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.