மாற்றுத் திறனாளிக்கு சார்ஜன்ட் பதவி வழங்கி, கௌரவிக்கிறது இலங்கை இராணுவம்
பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பராஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்றுக் கொடுத்தகோப்ரல் தினேஷ் பிரியந்தவிற்கு சார்ஜன்ட் தரத்திற்குபதவி உயர்த்த இலங்கை இராணுவம் தீர்மானித்துள்ளது.
சாதனை படைத்த இலங்கை வீரருக்கு சார்ஜன்ட் பதவி வழங்கப்பட்டதுடன் புதிய வீடுமற்றும் பணம் வழங்கப்பட்டதோடு பதக்கம் வென்ற இலங்கை வீரருக்கு இராணுவத் தளபதிலெப்டினன்ட் கிரிசாந்தி டீ சில்வா தனதுவாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோ நகரில் இடம்பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஈட்டி எறிதல்போட்டியில் தினேஷ் பிரியந்த வெண்கல பதக்கத்தை வென்றார்.
இந்த போட்டியின் போது 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எரிந்து தினேஷ்பிரியந்த மூன்றாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று நாடு திரும்பிய தினேஷிற்கு கொழும்பில் பலத்த வரவேற்புநடத்தப்பட்டது.
இதுவரையில் இடம் பெற்ற பரா ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்த 2வது பதக்கம்இது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment