ஹஜ்ஜுக்கு அனுப்புவதாக கூறி, ஏமாற்றிய முகவர்கள் பற்றி முறையிடுங்கள்...!
இலங்கைக்கு கிடைக்கும் மேலதிக ஹஜ் கோட்டாவின் மூலம் ஹஜ் ஏற்பாடுகளைச் செய்வதாக உறுதியளித்து மக்களிடமிருந்து முற்பணம் பெற்றுக்கொண்டுள்ள ஹஜ் முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரச ஹஜ் குழுவின் உறுப்பினர் மெளலவி எம்.எஸ்.எம்.தாஸிம் இவ்வேண்டுகோளை முன்வைத்துள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இவ்வருடத்துக்கான ஹஜ் கடமை தொடர்பில் கருத்து வெளியிடுகையில், இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் பயணம் மேற்கொண்ட யாத்திரிகர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர்.
அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு தற்போது ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம், ஏ.எச்.எம்.பெளஸி ஆகியோர் நேரடி விஜயங்களை மேற்கொண்டு முகவர்களால் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சேவைகள் பற்றி ஆராய்ந்தனர்.
அமைச்சர்களுடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளரும், ஹஜ் குழு உறுப்பினருமான எம்.எச்.எம்.பாஹிம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஸமீல், ஹஜ் குழுத்தலைவர் கலாநிதி எம்.ரி.சியாத் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்றார்.
ஹஜ் கடமையில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர்கள் ஹலீம், பெளஸி ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் மற்றும் அரச ஹஜ் குழுத்தலைவர் உட்பட உறுப்பினர்களும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஸமீல் ஆகியோரும் எதிர்வரும் 17 ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளனர்.
இஸ்லாத்தில் கொடுக்கல் வாங்கள் மிக முக்கியமான விடயம் அது போன்ற ஒரு முக்கியமான கொடுக்கல் வாங்கல்தான் ஹஜ்ஜுக்கு அனுப்பும் முகவர்களின் வேலை அனுப்புவதாக பணத்தை பெற்றுக்கொண்டால் முடியாமல் போகும் பட்சத்தில் பணத்தை திருப்பி கொடுப்பதுதான் சிறந்த வழி முறை.ஹஜ்ஜைகலையே இவ்வாறு ஏமாற்றும் இந்த முகவர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்ல பணம் கொடுத்தவர்களை என்ன பாடு படுத்தவார்கள்.உண்மையான முஸ்லிம் முகவர்களாக இருந்தால் மரியாதையாக பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும்.இவ்வாறு பத்திரிகைகளிலும் கோட்டுகளிலும் நார வேண்டிய அவசியம் இல்லை.கன்னிப்பாக குர் ஆனில் மிக நீண்ட வசனம் கொடுக்க வாங்கல் கடன் சம்மந்தமானதுதான்.இவ்வாறு மார்க்கத்தையும் சமுதாயத்தையும் தலை குனிய வைக்கும் விடயங்களில் ஈடுபடும் முகவர்களின் முகவர் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய வேண்டும்.
ReplyDelete