இலங்கையில் சிறிய தலைகளுடன், பிறக்கும் குழந்தைகள்
கடந்த 7 மாதங்களுக்குள் 22 குழந்தைகள் மிகவும் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதாக குடும்பநல சுகாதார அலுவலகத்தின் வைத்திய நிபுணர் கபில ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறித்த குழந்தைகளுக்கு தலை சிறியதாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த 22 குழந்தைகளின் தாய்மார்கள் கருவுற்றிருந்த நேரத்தில் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கும் சென்றிருக்கவில்லை என உறுதியாவதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பாரிஸ் நகரின் நிதியுதவியின் கீழ் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் தலை சிறிதாக பிறக்கும் குழுந்தைகள் தொடர்பில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment