Header Ads



ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ சவூதி மன்­ன­ரி­டம் வேண்­டுகோள் விடுத்தும் பலன் ஏற்­ப­ட­வில்லை

-விடிவெள்ளி ARA.Fareel-

இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்­டாவை பெற்றுக் கொள்­வ­தற்கு பல்­வேறு வழி­களில் முயற்­சித்த போதும் அது கை­கூ­ட­வில்லை. ஹஜ்­ஜா­ஜி­களின் பாது­காப்பு மற்றும் நலன் கரு­தியே மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை.

இலங்­கையின் முஸ்லிம் சனத்­தொ­கைக்­கேற்­பவே 2240 கோட்டா வழங்­கப்­பட்­டது என தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது, ‘மேல­திக கோட்டா இலங்­கைக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.ஏ.ஹலீம் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர ஆகியோர் சவூதி மன்­ன­ரி­டமும் ஹஜ் அமைச்­ச­ரி­டமும் வேண்­டுகோள் விடுத்தும் பலன் ஏற்­ப­ட­வில்லை. 

கடந்த வருடம் இலங்­கைக்கு 600 மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­பட்­டது.

அப்­போது இதன் பிறகு மேல­திக ஹஜ் கோட்டா வழங்­கப்­ப­ட­மாட்­டா­தென தெரி­விக்­கப்­பட்­டது.

என்­றாலும் மேல­திக ஹஜ் கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக பல முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டும் இலங்­கையின் கோரிக்­கையை சவூதி ஹஜ் அமைச்சு ஏற்றுக் கொள்­ள­வில்லை. 

இது­வரை காலம் எண்ணெய் மூலம் வெளி­நாட்டு செலா­வ­ணியைப் பெற்று வந்த சவூதி அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. இந்­நி­லையில் மேல­திக ஹஜ் கோட்­டாவை இலங்­கைக்கு வழங்கி அந்­நிய செலா­வ­ணியைப் பெறும் வாய்ப்பு சவூதி அர­சாங்­கத்­துக்கு இருந்தும் மக்­களின் பாது­காப்பு கருதி மேல­திக கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை. 

அமைச்சர் ஹலீமும் நானும் மேலதிக ஹஜ் கோட்டாவைப் பெற்றுக்கொள்வதற்கு பலமுயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் அது வெற்றியளிக்கவில்லை என்றார். 

2 comments:

  1. நடைமுறை உலகின் போக்கு பற்றியும் சமகால உலக அரங்கில் சவூதி அரேபியா எதிர்நோக்கும் பாரிய சவால்கள் குறிப்பாக ஹஜ் காலத்தில் சவூதி அரசின் பயங்கர நிலைமைகள் பற்றிய எந்த அறிவு ஞானமும் இன்றி சவூதி மன்னருக்கு அமைச்சர் வேறு சனாதிபதியையும் வலியுறுத்தி தேவையில்லாத வேலைபார்த்த இந்த சமூகத்தின் முன்னணியில் இருக்கும் மந்தைகளின் அறிவுஞானமற்ற செயல்பாடுகளுக்கு அனுதாபப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்கிய கழுதையை நடத்திக் கொண்டு போனாலும் குற்றம். அதன் மேல் சவாரி செய்தாலும் குற்றம். அதே நிலைமை தான் இந்த அமைச்சர்களுக்கும்.

      Delete

Powered by Blogger.