Header Ads



"இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டம் இல்லை"

ஜேர்மனியில் உள்ள நிறுவனங்கள் இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் அதிக நாட்டம் காட்டுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான ஆய்வு ஒன்றை சமீபத்தில் ஜேர்மனியில் அமைந்துள்ள பல்கலைக்கழகம் ஒன்று மேற்கொண்டுள்ளது. இதில் 1500 நபர்களின் வேலைக்கான விண்ணப்பத்தை ஆய்வு செய்த குறித்த பல்கலைக்கழகம், அதில் Sandra Bauer என்ற பெயர் கொண்ட நபர்களுக்கு 18.8% வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், Meryem Ozturk என்ற இஸ்லாமிய பெயர் கொண்டவர்களுக்கு 13.5% மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி Meryem தனது புகைப்படத்தில் தலை மூடியிருந்தமையால் 4.2% நிறுவனங்கள் மட்டுமே அவரை வேலைக்கான நேர்முகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த ஆய்வறிக்கையில் வெளியான தகவல்கள் அனைத்தும் ஜேர்மனியில் தற்போது நிலவும் அரசியல் சமூக சூழலை பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டு மட்டும் ஜேர்மனியில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வந்து சேர்ந்துள்ளனர். மட்டுமின்றி துருக்கியர்கள் மட்டும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஜேர்மனியில் உள்ளனர்.

2 comments:

  1. உலகின் எல்லா மூலைகளிலும் இஸ்லாத்தைப் பற்றியே பேசப்படுகின்றது. முஸ்லிம் அல்லாத சகோதரர்களே! இஸ்லாத்தைக் குற்றம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காவது அல் குர்ஆனை ஒருமுறையாவது படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Yes, I entirely agree with you brother..
      Yes, Al-Quran is the word of Allah and it's a bonanza to the humankind.

      Delete

Powered by Blogger.