அமைச்சரவை அங்கீகாரத்துடன், இம்தியாஸ் பாகீர் மாக்கர்
தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர் இன்று -19- பதவியேற்றார்.
பிரதமர் அலுவலகத்தின் கீழ் விசும்பாயவில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளராக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய கடமையாற்றுவார்.
குறித்த தேசிய ஊடக மத்திய நிலையம் ஊடாகஇ ஆய்வு மற்றும் வடிவமைத்தல்இ ஊடக நடவடிக்கைகளை ஆய்வு செய்தல்இ ஊடக நிறுவனங்களுக்கு தகவல்களை பெற்றுக்கொடுத்தல்இ பெறுதல்இ தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் என்பன இந்த மத்திய நிலையத்தின் கடமைகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக இம்தியாஸை நியமிக்கும் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தபோது, அமைச்சரவையின் முழு ஒப்புதல் கிடைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
C O N G R A T U L A T I O N S !
ReplyDeleteNanbikkay natchathtiram.waaltukkal
ReplyDelete