Header Ads



கிராமத்தில் உள்ள அனைவரும், இஸ்லாத்திற்கு மாறுவோம் - கிறித்தவ திருச்சபைக்கு மக்கள் கடிதம்

கிறித்தவ நாடான செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடுக்கு அருகிலுள்ள கிராமம் பரிஷ்.

இந்த கிராமத்தில் அண்மையில் புயல் வீசி கிராமம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. புயல் சேதத்தில் அந்த கிராமத்திலுள்ள தேவாலயமும் சேதமடைந்தது.

புயலில் சேதமடைந்த கிராம மக்களுக்கு உதவி செய்வதற்கு அரசோ, கிறித்தவ அமைப்புகளோ முன்வராததால் அந்த கிராம மக்கள் பெருமளவு அதிருப்தியடைந்து அந்த கிராம மக்கள் மற்றும் தேவாலயத்தின் பாதிரியார் ஆகியோர் செர்பியாவின் திருச்சபைக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில் சேதமடைந்திருக்கும் எங்கள் கிராமத்தை புனர் நிர்மாணம் செய்ய வேண்டும். எங்கள் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும், இல்லையேல் கிராம மக்கள் அனைவரும் இஸ்லாத்திற்கு மாறுவோம் என்று கூறியுள்ளனர்.

பொதுவாக உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் இஸ்லாமியர்கள் தங்களையே அர்பணித்து மனிதநேய உதவிகள் புரிவார்கள்.

ஏனென்றால் முஸ்லிம்களை பொறுத்தவரை துயரங்களை கண்டு "உச்" கொட்டி விட்டு செல்லும் சாமானிய மக்களாக வாழக்கூடாது, சமூகத்தை நேசிக்கக்கூடிய மனிதர்களாக முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்று முஹம்மது நபி அவர்கள் கூறியுள்ளதால் முஹம்மது நபியை பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் தங்களையே அர்பணித்து மனிதநேய உதவிகள் புரிவார்கள்.

முஸ்லிம்களின் மனிதநேயத்தை காதலிக்கும் அந்த கிராம மக்கள் கிறித்தவ திருச்சபைக்கு எழுதியுள்ள கடிதத்தால் கிறித்தவ மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 comments:

  1. இஸ்லாதிற்கு ந்மபிக்கைகொண்டோர்கள் தான் மாரவேண்டுமே தவிர சுயலாபத்திற்காக மாறுவதால் எந்தப்பயனுமில்லை.

    ReplyDelete
  2. ஆம் Voice. இஸ்லாத்தை விளங்கி ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் வரக்கூடிய சோதனைகளை தாங்க முடியும். இல்லாவிட்டால் எங்களுக்கு யாரும் உதவவில்லை என்று மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுவோம் என்றும் கூறி விடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.