அப்துல் பாஸித் மௌலவி, இலங்கை வருகிறார்.
-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும் தென் இந்திய பிரபல அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி இலங்கை வருகிறார். ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவினால் எதிர் வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவே இவர் இலங்கை வருகிறார்.
இம்மாநாடு எதிர் வரும் சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நடை பெறவுள்ளது.
இதே வேளை எதிர் வரும் 23 ஆம் திகதி பறகஹதெனியவில் ஜும ஆப்பேருரையை இவர் ,நிகழ்த்தவுள்ளதுடன் 25ஆம் திகதி மருதமுனையில் நடை பெறவுள்ள மர்க்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
Post a Comment