எழுக தமிழ், கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே பெயர்களில் இனவாத சக்திகள் தலைதூக்குகின்றன - ஹக்கீம்
வடக்கில் 'எழுக தமிழ்' என்றும் கிழக்கில் 'கிழக்கின் எழுச்சி' என்றும் தெற்கில் 'சிங்ஹ லே' என்றும் விதவிதமான இனவாத தீவிரசக்திகள் தலைதூக்க தொடங்கியிருக்கின்றன என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக வேண்டுமென்று முஸ்லிம் மக்களை தூண்டிவிடும் வகையிலான விபரீதக்கருத்துக்களை ஒரு சில தரப்புக்கள் பரப்பி வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பிலான மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீமை ஊடகவியலாளர் ஒருவர் பிரத்தியேகமாக சந்தித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பு நிர்ணயசபையின் பிரதான வழிநடத்தல் குழுவானது இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. குறிப்பாக அதிகாரப் பகிர்வு குறித்து அத்தியாயம் தொடர்பில் தற்போது ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.
அதாவது மாகாணசபை முறைமையில் ஒத்தியங்கு நிரலை அகற்றுவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். மத்திய அரசு, மற்றும் மாகாண அரசாங்கங்களின் அதிகாரங்களை மட்டும் வைத்திருக்கும் இரண்டு நிரல்களை வைத்திருப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். என்னைப் பொறுத்தவரையில் இதன்போது மாகாண ஆளுநர்களின் அதிகாரங்கள் தொடர்பில் ஆராயப்படவேண்டியுள்ளது.
சிறுபான்மையினங்கள் என்ற அடிப்படையில் இது தொடர்பில் நாங்கள் விசேடமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
முன்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இராணுவ அதிகாரிகளே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அதே பழக்கதோஷத்தில் தற்போது கூட ஆளுநர்களின் அதிகாரங்கள் அர்த்தமுள்ளநியாயபூர்வமான அதிகாரப் பகிர்வை பலவீனப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் செயற்பாடுகளையும் வடக்கு கிழக்கிற்கு வெளியிலுள்ள மாகாணங்களுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்களின் செயற்பாடுகளையும் பார்க்கும் போது பாரிய வித்தியாசங்களை எம்மால் கண்டுகொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரையில் இதுதொடர்பில் மிகவும் இறுக்கமான ஏற்பாடுகள் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்படவேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் நான் தீவிரமான நிலைப்பாடுடன் இருக்கின்றேன்.
இந்த நாட்டின் ஆட்சி முறைமை தொடர்பாகவும் சில முரண்பாடுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஒற்றையாட்சி, சமஷ்டி குறித்த விடயங்கள், மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
அந்த விடயத்திலும் சில கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. கட்சித் தலைவர்கள் மத்தியில் இவ்வாறான கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன.
இந்த இரண்டு விடயங்களையும் கடந்து பிரிபடாத ஒரு நாடு போன்ற பதங்களைப் பாவித்து சமஷ்டி ஒற்றையாட்சி என்ற பதங்களைப் பயன்படுத்தாமல் கூடுதலான அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்த முடியும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
இருந்தாலும் ஒற்றையாட்சி என்ற பதத்தை நீக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஒரு சில தரப்புக்கள் பிடிவாதமாக இருக்கின்றன. ஆனால் இந்த பிரச்சினையை மேலும் சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் சில சக்திகள் உருவெடுத்துள்ளன. வடக்கில் எழுக தமிழ் என்றும் கிழக்கில் எழுச்சி என்றும் தெற்கிலோ சிங்ஹலே என்றும் விதவிதமான இனவாத தீவிரசக்திகள் தலைதூக்க தொடங்கியிருக்கின்றன.
இவர்கள் வெவ்வேறு துருவங்களாக செயற்படுவதாக தென்பட்டாலும், ஒருவருக்கொருவர் உதவுகின்ற பாணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இறுதியில் இவர்கள் எல்லோரும் எதிரியின் நண்பர்கள் என்ற அடிப்படையில் செயற்படுவதைப் போலத்தான் நாங்கள் காண்கின்றோம். குறிப்பாக மிகவும் பக்குவமாகவும் சாணக்கியமாகவும் கையாளப்படவேண்டிய விடயங்களை பகிரங்கமாக போட்டுடைத்து குழப்பிவிடுகின்ற நிலவரங்களை ஏற்படுத்தக் கூடாது.
அவ்வாறு மிகவும் கவனமாக இந்த விடயங்களை நாங்கள் கையாளவேண்டியுள்ளது. இதேபோன்றுதான் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாகவும் வேண்டுமென்று முஸ்லிம் மக்களை தூண்டிவிடும் வகையிலான விபரீதக்கருத்துக்களை ஒரு சில தரப்புக்கள் ஏற்படுத்தி வருகின்றன.
அதாவது அரசியல் ரீதியில் வங்குரோத்துக்கு வந்துவிட்ட ஒருசிலர் இந்த விடயங்களை தற்போது தூக்கிப் பிடித்துக்கொண்டு திரிகின்றார்கள்.
ஒன்பது மாகாணங்கள் குறித்த விடயத்தில் பிரதான வழிநடத்தல் குழுவிலுள்ள கட்சித் தலைவர்கள் மத்தியில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மாகாணங்கள் இணைவது தொடர்பான செயற்பாடுகள் அரசியலமைப்பில் ஏற்கனவே நிபந்தனைக்குட்பட்டவை. எனவே பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படாமல் அவை சாத்தியமாகாது. அதேவேளை இரண்டு மாகாணங்களுக்கிடையில் ஒரு சில இணக்கப்பாடுகளோடு சில விடயங்களில் மட்டும் ஒத்துழைப்புடன் செயற்படுவது தொடர்பிலும் பரிசீலிக்கலாம்.
ஆனால் வேண்டுமென்றே இந்த இணைவு சம்பந்தமான விடயங்களை அதனுடைய சாத்தியப்பாடு தொடர்பான தெளிவில்லாமல் ஒரு புரளியாக சில தரப்பினர் சொந்த சுயலாப அரசியலுக்காக கையிலெடுத்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் வேண்டுமென்றே மௌனத்துடன் இருப்பதாகவும் ரகசிய உடன்பாடுகளுக்கு வந்துள்ளதாகவும் ஒரு சிலர் பேசித் திரிகின்றனர். அதாவது முன்னைய ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சில அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட்டு பின்கதவால் இந்த ஆட்சியுடன் இணைந்து கொண்டவர்கள், இன்னும் இணைந்துகொள்வதற்கு காத்துக்கொண்டிருப்பவர்கள், போன்றவர்களின் மேற்குறித்த விபரீத விளையாட்டு மிகவும் ஆபத்தானது.
இதில் நாங்கள் எல்லோரும் கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
-விடிவெள்ளி-
அட பச்சோந்தி கிழக்கின் எழுச்சி இன வாதமா நீயே மற்றவர்களுக்கு சொல்லிக்கின்றாயா இதுவரை இல்லாத ஒரு கருத்தை நீயே ஏற்படுத்தி கொடுக்கின்றாயா.உனக்கு சரியான பாடம் கற்பிக்கத்தான் வேண்டும் காத்திரு
ReplyDeleteI stand with u.
Deleteஇதுதான் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பவனின் பண்பு.
ReplyDeleteRAUF HALEEM Wartayil oru tawarum illai.unmayey than solli irikkirar.kilakkukku mattuma eluchchi? Matra muslim makkalukku enna KAVICHCHIYA?
ReplyDeleteஅஷ்ரபை அழித்து விட்டு அவருடைய கிரீடத்தை அணிந்து கொண்டு இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு செய்து கிழிச்சது என்னவென்று கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முழு நாடும் அறிந்து விட்டது . போதும் உங்கள் பம்மாத்து பேச்சு . முஸ்லிம்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை தெற்கிலும் வடக்கிலும் உள்ள பேரினவாதிகளின் உரிமைக்காக பாவிக்கின்ற தன்மானங்கெட்ட தலைவன் ஹக்கீம் என்பதை மக்கள் தற்போது புறிந்து கொண்டார்கள் . இனி இறைவனின் தீர்ப்பு உங்களுக்கு நெருங்கி விட்டது தலைவா .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவடக்கும் கிழக்கும் இணைவதர்க்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதித்தால் அதுதான்மு ஸ்லிம் காங்ரசின் அஸ்தமணம்
ReplyDeleteகிழக்கின் எழுச்சி எந்த வகையில் ஒரு இனவாதக் கட்சி..???? தலையங்கத்தை பார்த்தால் ஒரு தமிழ் குழு, சிங்கள குழு, ஆகவே கிழக்கின் எழுச்சி முஸ்லீம் குழுவாகத்தான் இருக்கும். கிழக்கின் எழுச்சி குழு உங்களின் தலைமைத்துவத்துக்கு எதிராகவே செயட்படுகிறார்கள். நீங்கள் கூறியபடி கிழக்கின் எழுச்சி இனவாதக் குழு வாக இருந்தால், நீங்கள் எந்த இனம்? எந்த மதம்?
ReplyDeleteஇதிலேயே சொதப்பல், பிறகு எப்படி ஒரு இனத்தின் பிரச்சினையை உங்களால் முன்னெடுத்து செல்ல முடியும்.
கிழக்கின் எழுச்சி எந்த வகையில் ஒரு இனவாதக் கட்சி..???? தலையங்கத்தை பார்த்தால் ஒரு தமிழ் குழு, சிங்கள குழு, ஆகவே கிழக்கின் எழுச்சி முஸ்லீம் குழுவாகத்தான் இருக்கும். கிழக்கின் எழுச்சி குழு உங்களின் தலைமைத்துவத்துக்கு எதிராகவே செயட்படுகிறார்கள். நீங்கள் கூறியபடி கிழக்கின் எழுச்சி இனவாதக் குழு வாக இருந்தால், நீங்கள் எந்த இனம்? எந்த மதம்?
ReplyDeleteஇதிலேயே சொதப்பல், பிறகு எப்படி ஒரு இனத்தின் பிரச்சினையை உங்களால் முன்னெடுத்து செல்ல முடியும்.
அந்த பச்சோந்தியின் அநியாய அக்கிரமத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்குத்தான் இது உருவானது.அதை இந்த அக்கிரமக்காறன் வேறு விதமாக திரிபு படுத்தி மற்றவர்களுக்கு காட்டி கொடுக்க எத்தனிக்கின்றான் நயவஞ்ஞகனான எட்டப்பன் இந்த பொறிக்கி.இவனுக்கு முடிவு காலம் நெரிங்கி விட்டது.எனவே இவனை எங்கள் நேர்மையான தலைவனின் கட்சியை விட்டு தூக்கி எறிந்தால் எல்லா பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.அவனை மட்டும் அல்ல அவனோடு இணைந்து கொண்டு வயிற்றை வளர்த்துக் கொன்டு சமூகத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல் தாளம் போடும் ஒவ்வொருவரையும் முஸ்லிம் காங்கிரஸை விட்டும் தொலைக்க வேண்டும்
ReplyDelete