நூடுல்ஸ் சாப்பிட்டு, காது கேட்கும் திறனை இழந்த வாலிபர்
இந்தோனேசியாவின் உள்ளூர் உணவான டெத் நூடுல்ஸ் உலகின் மிக காரமான உணவாக திகழ்கிறது. சமீபத்தில் இந்த உணவை சாப்பிட்ட வாலிபர் ஒருவர் காது கேட்கும் சக்தியை இழந்தார்.
மிளகாய் சாஸை விட 4 ஆயிரம் மடங்கும், பேர்ட் ஐ (Bird’s eye) மிளகாய்யை விட 100 மடங்கும் அதிகக் காரம் கொண்டதுமான மம்பஸ் (Mampus) என்ற மிளகாய் இந்த் நூடுல் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
மம்பஸ் என்றால் மரணம் என்று அர்த்தமாகும். இந்நிலையில் மேற்கத்திய நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தோனேசியருடன் டெத் நூடுல்ஸ் போட்டியில் மோதி உள்ளார்.
இருவருக்கும் ஒரு தட்டில் டெத் நூடுல்ஸ் பரிமாறப்பட்டது. மேற்கத்தியர் சாப்பிட ஆரம்பித்ததும் வியர்த்துக் கொட்டியது, நாவில் இருந்து நீர் வடிந்தது, கண்ணீர் பெருகியது.இது உண்மையிலேயே டெத் நூடுல்ஸ்தான். உலகிலேயே காரம் அதிகமான உணவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறி உணவை மீதி வைத்துவிட்டார்.
ஆனால், உள்ளுரை சேர்ந்தவரோ நிதானமாக பரிமாறப்பட்ட நூடுல்ஸ் அனைத்தையும் உண்டு போட்டியில் வெற்றிப்பெற்றார்.
Post a Comment