முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட சதியை, வெளியிட்டான் ஞானசாரா (வீடியோ)
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் கொரியாவுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது அங்கு உள்ள இலங்கை சிங்கள சமூகத்தவர்களிடையே நடத்தியதாக கூறப்படும் சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
மும்மானை விவகாரம் எப்படி ஆரம்பித்தது எனவும் அதற்காக தாம் ஒரு வருடமாக செய்த நடவடிக்கைகளையும் ஞானசார இதன் போது விளக்கியுள்ளதுடன் முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்குவதை இலக்காகக் கொண்டே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பிலான வீடியோ ஒளிப்பதிவை 'கொழும்பு டெலிகிராப்' ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் ஞானசார தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கட்சிக்காக உயிரை விட தயாரான ஒரு குழு உள்ளது. எனினும் நாட்டுக்காக உயிரை விட யாரும் தயாராக இல்லை. எனவே நாம் நாட்டைப் பற்றி யோசிக்கும் மக்களையே உருவாக்க வேண்டும். இன்னொரு விடயமும் உள்ளது. நான் இது பற்றி ஏற்கனவே பல தடவைகள் கூறியுள்ளேன். 6000 முதல் 7000 வரையில் எமது யுவதிகள் தற்போது முஸ்லிம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். இது பயங்கரமான நிலைமையாகும்.
உதாரணமாக உங்களில் யாராவது கொரிய யுவதி ஒருவரை மணம் முடிப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அவளை இலங்கைக்கு அழைத்துச் சென்றால் நீங்கள் அவரது பெயர், பரம்பரையை மாற்ற நடவடிக்கை எடுப்பீர்களா? இல்லை தானே. பெயர் பரம்பரை அப்படியே தான் இருக்கும். நாங்கள் அந்த அந்த கலாசாரங்களுக்கு மதிப்பளித்து அவ்வாறு நடந்து கொள்கின்றோம்.
எனினும் முஸ்லிம் ஒருவர் சிங்களவர் ஒருவரை மணமுடித்தால் என்ன நடக்கின்றது? இரண்டு மூன்று மாதங்களில் அந்த பெண்ணின் முழுப் பெயர் மாற்றப்படுகின்றது. அவளது பரம்பரையே மாற்றப்படுகின்றது. அந்த நிமிடத்தில் இருந்து சிங்களப் பெயர் கலாசாரம் எல்லாம் முடிவடைந்து விடும்.
அதற்குப் பிறகு பாத்திமா என்றோ அல்லது வேறு வடிவிலோ பெயர் ஒன்று வரும். பிள்ளைகளுக்கும் அவ்வாறே. பிள்ளைகளுக்கு சிங்களப் பெயர் வைக்கமாட்டார்களே. அங்கும் மொஹம்மட் குட்டிகளே உருவாகும். அதனால் இந்த நடவடிக்கைக்கு கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
நாம் அதற்கு எதிராக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அரசியல் ரீதியாக எமக்கு சிறு ஒத்துழைப்பு கிடைத்தால் இதனை முற்றாக ஒழித்துவிடலாம். எனினும் எமது அரசியல்வாதிகளின் முதுகெலும்பில்லாத நடவடிக்கைகளும் அவர்கள் ஆட்சி, பதவி மீது கொண்டுள்ள மோகமும் எமது சிங்கள சமூகத்துக்கு கிடைத்த சாபக் கேடுகளாகும்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம், கடந்த நாட்களில் குளியாபிட்டிய பகுதிக்கு என்னை வர வேண்டாம் என கூறி தடை உத்தரவொன்றினைப் பெற நீதிமன்றை நாடினர். ஏன் அவ்வாறு நடந்தது. பன சொல்வதை தடை செய்யவே அவ்வாறு முயற்சிக்கப்பட்டது. நாம் அங்கு ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுத்தோம். அந்த வேலைத் திட்டம் ஒரு வருடத்தில் வெற்றியடைந்தது. உங்களிடம் நான் அதைக் கூறுகின்றேன். ஏனெனில் உங்கள் மத்தியில் உள்ள 15 அல்லது 20 பேரோ அதனை விளங்கி அவ்வாறு செய்யுமாறு இலங்கையில் உள்ளவர்களுக்கு கூறினால் அதுவே பாரிய வெற்றியாக இருக்கும்.
குளியாபிட்டியின் மும்மான எனும் பகுதியில் அழகான ஒரு வேலைத் திட்டத்தை நாம் முன்னெடுத்தோம். அது மிக்க வெற்றியை தந்தது. ஒரு வருடமே அமுல் செய்தோம். நான்கு இளைஞர்களே களத்தில் இறங்கினர். ஐந்து, ஆறு ஊர்கள் ஒன்று சேர்ந்தன. அது ஒரு சிறிய முஸ்லிம் நகரம். அந்த நகரம் போசனையடந்தது, குறித்த சிங்கள ஊர்கள் காரணமாகவே. அந்த ஊரைச் சார்ந்தோர் இந்த வர்த்தகம் காரணமாக செல்வந்தர்களாக மாறியதையடுத்து பண பலத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இதன் பலனாக அப்பகுதியில் இருந்த மைதானத்தை அவர்கள் வளைத்துப் போட முனைந்தனர். எமது சிங்கள இளைஞர் யுவதிகளுக்கு விளையாட இடம் கிடைக்கவில்லை. அவர்கள் மைதானத்தை சுற்றி மையவாடி, மத்ரஸா போன்றவற்றை அமைத்து தமது பண பலத்தை காட்டத் தொடங்கினர் . இதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புக் காட்டத் தொடங்கினர்.
வீடுகளில் நடப்படும் வெண்டிக்காய், பயற்றங்காய் போன்றவை அதிகமாக அறுவடை செய்யப்படும் போது, அதனை கடைகளுக்கு எமது தாய்மார் கொடுப்பது வழமைதானே. இந்த நிலையில் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து முஸ்லிம் முதலாளியிடம் சென்று அவ்வாறு மேலதிக அறுவடையை கொடுத்துள்ளனர். இதன் போது அந்த முதலாலிகள் ' எமக்கு இவற்றை பெற வேண்டாம் என பள்ளிவாசலால் கூறியுள்ளனர். மைதான விடயத்தில் எதிர்ப்புக் காட்டினீர்கள் தானே.' எனக் கூறியுள்ளனர்.
அந்த விடயத்தை எமது தாய்மார் சாதகமாக எடுத்துக் கொண்டனர். பயிற்றங்காய் கட்டுகளை வீசிவிட்டு அவர்கள் களத்தில் இறங்கினர். மிக அழகான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தற்போது அந்த முஸ்லிம் நகரம் முழுவதும் ஈ அடிக்கின்றார்கள். நாம் அங்கு சிங்கள கடைகள் 6, 7 வரை அமைத்து நல்ல வேலைத் திட்டத்தை ஆரம்பித்துவிட்டோம். அதனால் முஸ்லிம் வர்த்தகர்கள் மூக்கால் அழுகின்றனர். அவர்கள் பள்ளிவாசலுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஹாட்வெயார் ஒன்றின் முதலாளி தான் 7 இலட்சம் ரூபா கொடுக்க வேண்டும் என மூக்கால் அழுகின்றார். இந்த நிலையில் இப்பிரச்சினை பிரதேச செயலகம் வரையில் சென்றுள்ளது. அங்கு கலந்துரையாடல் நடக்கும் போது அவர்களுக்கும் விடயம் விளங்கியுள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு உள்ள பண பலத்தையோ அல்லது அரசியல் பலத்தையோ பயன்படுத்தி சிங்கள கடைகளுக்கு செல்லாமல் முஸ்லிம் கடைகளுக்கே சிங்களவர்கள் செல்ல வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படலாம் என நினைத்தே, ஞானசார தேரர் வந்து ஒரு' பன' நல்லுபதேசம் செய்ய வேண்டும் என அவர்கள் தீர்மானித்து என்னை அழைத்தனர்.
இதனையடுத்தே நான் அங்கு செல்வதை தடை செய்யும் விதமாக தடை உத்தரவொன்றைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கையெழுத்திட வேண்டும் அல்லவா? இந் நிலையில் இந்த தடை உத்தரவைப் பெற்றுக்கொள்ள முன் நின்றவர்களை அழைத்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நான் ஞானசார தேரரின் 'பன' உபதேசம், வேறு உபதேசங்கள் எல்லாம் கேட்டிருக்கின்றேன். நீங்களும் சென்று கேட்டுப்பாருங்கள் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்தே பொலிஸார் 700 பேர் வரையில் குவிக்கப்பட்டு அந்த உப தேசம் மிக அழகாக இரண்டு மணி நேரம் நடை பெற்றது.
நான் இதனை ஏன் சொன்னேன் என்றால், நாம் நினைத்தால் மிக அழகாக எமது வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அதனால் ஒரு வளத்தையேனும் வீணாக செலவழிக்காது, சம்பாதித்து சிறு அளவேனும் சேமித்து காணி, இடமொன்றை கொள்வனவு செய்து ஏதேனும் ஒரு வியாபார நடவடிக்கையை ஆரம்பியுங்கள்.
அதனூடாக முன்னேற முயற்சிக்க வேண்டும். கண்டிப்பாக முடியும். எமது சமூகம் எல்லா வகையிலும் வேற்றுமைப்பட்டு நிற்கின்றது. பன்சலைகளில் பிரிவினை, மத குருமார்களிடையே பிரிவினை என எல்லா இடங்களிலும் பிரிவினையே மேலோங்கி நிற்கின்றது. சில சமயங்களில் பிரபாகரன் செய்ததைப் போன்று ரீ 56 ரக துப்பாக்கியை கையிலேந்தவும் எண்ணம் தோன்றுகின்றது. எனினும் நாம் தேரர்கள் என்பதால் அது முடியாதுள்ளது.
பிரபாகரன் மட்டுமே உலகில் ஒரு அமைப்பை ஒரு முகமாக இறுதிவரை முன்னோக்கி கொண்டு வந்தவர். அல் கைதாவாலோ அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பாலோ கூட அது முடியாது போனது. அவர்கள் கூட இரு பிரிவுகளாக பிரிந்தனர். எனினும் 30 வருடங்கள் பிரபாகரன் அமைப்பை பிரிவினை இன்றி முன்னோக்கிக் கொண்டு வந்தார்.
காரணம் அதன் உறுப்பினர்களின் கழுத்தில் சயனைட் குப்பிகள் தொங்கவிடப்பட்டன. மறுத்தால் பின் புறத்தே ரீ 56 துப்பாக்கியால் சூடு வைக்கப்பட்டது. நான் நினைக்கின்றேன், சிங்களவர்களையும் அப்படியான ஒரு நடவடிக்கை மூலமே ஒரு முகப்படுத்த முடியும்.
-விடிவெள்ளி - MFM.Fazeer-
https://www.youtube.com/watch?time_continue=33&v=68Qwu6y4k10
-விடிவெள்ளி - MFM.Fazeer-
This story may be true or false..we should use our brain also...mosques administration should have knowledge how to guide people around them..
ReplyDeleteThey should not tell to buy or sell for any one..business is beyond all religious limitations...we should not divide people like that..
I do not know if it is true that this shop Ower said likewise that to that Sinhalese ladies ..it may be some creation from BBS. BBS will try to do all dirty work to confuse people....they do not like to see people live in peace..they do not like Singhalese and Muslims live in peace ..
They want to incite violence
Before we do any thing we should be careful..
Believe me that even if they start shops and market many sinhasles people prefer Muslims over in Shinha shop ...
It is not a problems.
But we should think carefully before we do take any action in mosques .people need to eBay educated
BBS's invention to bring down muslims's business by instructing Sinhalese people not to keep business relationship with Muslims will not succeed if we Muslims do our business according to Islam.Islam has given us an atractive way of business . If we do so we can get rewards in next life (,which is the our main goal) as well as here. Most of Sinhalese brothers now understood the baseless intention of BBS so that they have allready neglected the group. We saw that clearly in the last election. Very few chose BBS to cast thire votes. But still our business men should show our good manners and attitudes in business. This our obligation towards Islam and our community.
ReplyDeleteAnyway Muslims will never unite.they will succeed secretly wt they planned.Muslims as usual they will fight as thawheed,thableeq,hubbu n jamath Islamic.
ReplyDeleteThis Galaboda Thero is intentionally misleading the
ReplyDeletepeople he is supposed to be guiding .His destructive
racist politics is harming not only Muslims but also
his adherent Buddhist followers and the whole
country. He continues his ranting of Muslim way of
life as if he had lived part of his life in Islam .I
have a strong feeling that he follows what Zakir
Naik does to other religions in India , belittling
other religions in public .
Sinhalese girls converting to Islam before marriage
to their Muslim boy friends is voluntary with full
of enthusiasm on the part of the girls. Sinhalese
are a free society ready to mix with any other
society wherever in the world . Galaboda can not
stop it ! Our boys will go on loving Buddhist
girls as long as Buddhist girls want them .
Simple as that . Obama has said America stands
by that freedom in our country !
As Rifkan Nawas said it's so difficult to unite our people. We belong to many different groups called as Thouheeth Thableek etc.. Uniting our people is only possible when all the moulavis unite..
ReplyDelete?
ReplyDeleteIf the Masjid Administrators have advised the Muslim shop owners to not purchase vegetables from the local Sinhala Producers, its totally wrong! They are responsible for all happenings against that particular place.
ReplyDelete