Header Ads



பணத்துடன் காணாமல்போன முஸ்லிம், வர்த்தகர் பற்றி தகவல் இல்லை - குடும்பத்தினர் பரிதவிப்பு


-விடிவெள்ளி MFM.Fazeer-

பண்­டா­ர­கம பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட அட்­டு­லு­கம பகு­தியைச் சேர்ந்த தங்க நகை வர்த்­தகர் மொஹம்மட் நஸ்ரின் எனும் 35 வய­து­டைய வர்த்­தகர் காணாமல் போயுள்ளார். 

திரு­கோணமலை, இலங்கை வங்­கிக்­கி­ளையில் இடம்­பெற்ற தங்க நகை ஏல விற்­பனையில் கலந்­து­கொள்ளச் சென்ற நிலை­யி­லேயே அவர் இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தா­கவும் இதன் போது அவ­ரிடம் சுமார் ஒரு கோடி ரூபா வரையில் பணம் இருந்­த­தா­கவும் பண்­டா­ர­கம பொலிஸ் நிலை­யத்தில் அவரின் தந்­தை­யினால் செய்­யப்­பட்ட முறைப்­பாட்டில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

 இது தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது,

 நேற்று முன் தினம் ஏல விற்­பனை தொடர்பில் கந்­தளாய் ஹோட்டல் ஒன்றில் தங்­கி­யி­ருந்த நிலையில் மொஹம்மட் நஸ்ரின் என்ற குறித்த வர்த்­த­கரும் அவ­ரு­டைய  உத­வி­யா­ள­ராக சென்ற மொஹிதீன் பிர்­தெளஸ் எனும் நபரும் ஏல விற்பனை தொடர்பில் திருகோணமலைக்கு சென்றுள்ளனர். இதன் போதே குறித்த வர்த்தகர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் வர்த்தகரின் தந்தையும் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் அவரது உதவியாளரும் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ள நிலையில் இரு பொலிஸ் நிலையங்களின் சிறப்புக் குழுக்கள் ஊடாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் வர்த்தகரின் தந்தையால் வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டு வாக்கு மூலத்தில்,

குறித்த ஏல விற்பனையில் தனது மகன் கலந்துகொண்டுள்ளதாகவும் இடை நடுவே வெளியே தனது உதவியாளருடன் வந்து மருந்தகம் ஒன்றுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு மாத்திரை ஒன்றினை கொள்வனவு செய்துள்ளதாகவும் அதன் பின்னர் மீள  வங்கியில் இடம்பெற்ற ஏல விற்பனை நடவடிக்கைகளுக்குச் செல்லும் போது அவர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்கியின் சீ.சீ.ரி.வி. கமரா, இறுதியாக சென்றதாக கூறப்படும் மருந்தகம் உள்ளிட்ட பல இடங்களை மையப்படுத்தி திருகோணமலை பொலிஸார் நேற்று விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

எனினும் நேற்று மாலை வரை வர்த்தகர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.

இந்நிலையில் மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

3 comments:

  1. ITHUVUM ORU ULKUTTHU VELA. MOHIDEEN FIRDOWS IKU 4 KUTHTHU KUTHTHNA MASTER UNMAYA KAKKUWARU.

    POLICE DPT DOT NOT DELAY DO THIS FIRST.

    ReplyDelete
  2. This is also must be an internal game, police has to take Moideen Firdows in to the custody immediately.

    ReplyDelete

Powered by Blogger.