ஞானசாரர் மீது குற்றப்பத்திரிகை, சட்டமா அதிபர் உத்தரவு
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது
கடந்த ஜனவரி 25ஆம் திகதியன்று ஹோமாகம நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த உத்தரவு நேற்று (27) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜரான கலகொட அத்தே ஞானசார தேரரின் சட்டத்தரணி, தாம் குறித்த மனு தொடர்பில் ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
குறித்த திகதியன்று தமது கட்சிக்காரரான ஞானசார மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நீதிமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னரே இடம்பெற்றுள்ளது.
எனவே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ள தக்கதல்ல என்று சட்டத்தரணி கூறியுள்ளார்.
Adikaranaya hema welawema Adikaranayama tamai eka eriya wehuwa kiyala wenasak neha.apahasakalanam dedi danduwam dennama oney.perakadoruwa nam salli aran ehata mehata peralanda balai.danduwama diya yutumai.
ReplyDelete