வடமாகாண மக்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க, தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
வட மாகாணத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினைகளை தாய்மொழியில் தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தொலைபேசி அழைப்புக்களை கையாள்வதற்கான காரியாலயம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வட மாகாண மக்கள் 0766226363 அல்லது 076 6224949 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தமது தாய்மொழியில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என பொலிஸ் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அந்த இலக்கங்கள் 0766226363 அல்லது 076 6224949
சமாதானம் ,ஒருமைப்பாடு,நல்லிணக்கம் என்பவற்றின் தொடர்பாடல் எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Post a Comment