Header Ads

ஹரீஸின் ஏற்பாட்டில், அஷ்ரஃப்பின் நினைவுதின நிகழ்வு

(ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைடீன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் 16வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு; கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கல்முனை காரியாலயத்தில் நாளை (16) வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், ஹாபிழ்கள், கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன்போது மறைந்த தலைவரின் பெயரால் குர்ஆன் தமாம் நிகழ்வும், அன்னாரின் மறுமை வாழ்விக்காக விசேட துஆப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.

2 comments:

  1. கத்தம் ஓதுவது சரியாய் பிழையா என்ற விவாதத்தை துவங்கி வைக்கிறோம். பிழை என்று சொல்பவர்களும், சரி என்று சொல்பவர்களும் ஆதாரங்களுடன் பதிவிடுங்கள். பத்து தாருஸ்ஸலாம் கட்டுமளவும், முழு இலங்கையிலும் தனது பணத்தினால் தேர்தல் நடத்தவும் பொருளாதாரம் படைத்த தலைவரவர்கள் இருக்கும் போது கடற்க்கரை பள்ளிவாசலில் ஊருக்கே ஒரு சாப்பாடு போடலாமே.

    மறைந்த தலைவர் கட்சியை உருவாக்கியது முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதட்காக, ஆனால் தற்போது கொஞ்ச கூட்டம் அந்த கட்சியை வைத்துக் கொண்டு புலப்பு நடத்துது.

    ஒரு தேசியப்பட்டியல் எம்பியை தீர்மானிக்க முடியாத தலைவரும் அவருக்கு வக்காலத்து வாங்கும் உப தலைவரும். சாது மிரண்டால் காடு பிறழும். மக்களும், உண்மையான காங்கிரஸ் போராளிகளும் சேர்ந்து, உங்கள் எல்லோருக்கும் ( தலைவருக்கும் அவரது அடிவருடிகளுக்கும் ) கத்தம் ஓதும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    மாற்றம் தேவை புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் இதட்காக முயட்சி செய்வார்களா??

    ReplyDelete
  2. கத்தம் ஓதுவது சரியாய் பிழையா என்ற விவாதத்தை துவங்கி வைக்கிறோம். பிழை என்று சொல்பவர்களும், சரி என்று சொல்பவர்களும் ஆதாரங்களுடன் பதிவிடுங்கள். பத்து தாருஸ்ஸலாம் கட்டுமளவும், முழு இலங்கையிலும் தனது பணத்தினால் தேர்தல் நடத்தவும் பொருளாதாரம் படைத்த தலைவரவர்கள் இருக்கும் போது கடற்க்கரை பள்ளிவாசலில் ஊருக்கே ஒரு சாப்பாடு போடலாமே.

    மறைந்த தலைவர் கட்சியை உருவாக்கியது முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதட்காக, ஆனால் தற்போது கொஞ்ச கூட்டம் அந்த கட்சியை வைத்துக் கொண்டு புலப்பு நடத்துது.

    ஒரு தேசியப்பட்டியல் எம்பியை தீர்மானிக்க முடியாத தலைவரும் அவருக்கு வக்காலத்து வாங்கும் உப தலைவரும். சாது மிரண்டால் காடு பிறழும். மக்களும், உண்மையான காங்கிரஸ் போராளிகளும் சேர்ந்து, உங்கள் எல்லோருக்கும் ( தலைவருக்கும் அவரது அடிவருடிகளுக்கும் ) கத்தம் ஓதும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    மாற்றம் தேவை புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் இதட்காக முயட்சி செய்வார்களா??

    ReplyDelete

Powered by Blogger.