Header Ads



உலமா கட்சிக்கு, சர்வதேச அங்கீகாரம் (படங்கள்)

-ஊடக அறிக்கை-

தென் கொரியாவை தளமாகக்கொண்ட பரலோக கலாசாரம் மற்றும் உலக சமாதானத்துக்கான அமைப்பின் சர்வதேச சமயத்தலைவர்களின் மாநாடு தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த 17ந்திகதி முதல் நடந்து கொண்டிருக்கின்றது. 170 நாடுகளைச்சேர்ந்த உலகின் பல முக்கிய சமயங்களின் சமயத்தலைவர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் இலங்கையிலிருந்து பௌத்த மதத்தை பிரதிநிதித்துவ படுத்தி இத்தபான தம்மாலங்கார  தேரரும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி உலமா கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதும் கலந்து கொள்கின்றனர்.

உலகம் முழுவதும் யுத்தம் நீங்கி சமாதானம் எற்பட வேண்டுமென்பதற்காக மேற்படி அமைப்பு பல முயற்சிகளையும்; நடவடிக்கைகளையும் அதன் தலைவர் திரு. லீ அவர்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழி காட்டலின் கீழ் செயற்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பின் சர்வதேச மாநாடு கடந்த 2014ல் நடைபெற்றதற்குப்பின் இந்த வருடம் வெகு விமர்சையாக நடை பெறுகிறது. 

இந்த மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் சியோல் ஒலிம்பிக் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் மத்தியில் நடை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுகல மதங்களும் சகல இனங்களும் சம உரிமை பெற்று சமாதானமாய் செயற்பட வேண்டும் என்ற இலக்கைக்கொண்டு மேற்படி  அமைப்பு சர்வதேச ரீதியாக 170 நாடுகளில் கிளைகளை ஏற்படுத்தி செயற்படுகிறது. மேற்படி மாநாட்டில் உலமா கட்சித்தலைவர் கலந்து கொள்வதன் மூலம் இலங்கையின் உலமாக்கட்சிக்கென சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாகவே அரசியல் அவதானிகளால் கருத்தக் கொள்ளப்படுகிறது.



5 comments:

  1. Why did Ulama Kadchi Leader attended the religious leaders' meeting? 'Too many leaders' is the problem of the Muslim society.

    ReplyDelete
  2. இந்த 'உலமா கட்சி' ஆள்பற்றிய கதைகளை தயவுசெய்து உங்கள் இணையத்தளத்தி்ல் பிரசுரம் செய்து இந்த இணையத்தளத்தின் தரத்தை பாழ்படுத்தவேண்டாம். இந்த ஆசாமி மிகவும் பயங்கரமான மானசீக நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தயவுசெய்து இந்த செய்தியை மிகவும் உன்னிப்புடன் வாசித்து சமூகத்தினதும் நாட்டுமக்களினதும் நலன்கருதி செயற்படுத்தவும்

    ReplyDelete
  3. I'm wonder that how he can represent for our community ????

    ReplyDelete
  4. இது அரசியல் விளையாட்டு.

    ReplyDelete
  5. தேசிய அங்கீகாரம் எடுக்க முடியாத கட்சி

    ReplyDelete

Powered by Blogger.