இலங்கைக்கு மேலதிக ஹஜ் கேட்டாவை வழங்கமுடியாது - கைவிரித்தது சவூதி, பணம் செலுத்தியோர் ஏமாற்றம்
ஹஜ் யாத்திரையாளர்களுக்காக மேலதிகமான கோட்டாவை பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமயம் கலாசாரத் திணைக்களம், முகவர்கள் சேர்ந்து முழு நேரமும் கடைசிவரை பல முயற்சிகள் செய்த போதும் தற்போது பாதுகாப்பு நலன் கருதி மேலதிகமான கோட்டாவை வழங்க முடியாத சூழல் நிலை காணப்படுவதாக என சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல ஏனைய நாடுகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட இந்த மேலதிகமான கோட்டா மூலம் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள நிய்யத்து வைத்த அனைத்து மக்களுக்கும் அல்லாஹ் நிச்சயமாக நற் கூலியை வழங்குவான். அல்லாஹ்வின் நாட்டப்படியே தான் எல்லாம் நடக்கும். எனவே நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கும் மேலதிகமாக கோட்டா கிடைத்தால் ஹஜ் யாத்திரை சேல்வோம் என எதிர்பார்த்து நிய்யத்து வைத்த மக்களுக்கும் அல்லாஹ்விடம் நற் கூலி உண்டு. அடுத்த வருடம்
இந்த மக்களுக்கு ஹஜ் யாத்திரை செல்வதற்கு முன்னுரிமை வழங்கவுள்ளோம். அத்துடன் எமது இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்திற்கு இணங்க 2240 ஹஜ் யாத்திரை புனித மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செல்கின்றார்கள் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்
இம்முறை மேலதிக ஹஜ் கோட்டா மூலம் ஹஜ் யாத்திரை செல்ல ஆவலுடன் காத்திருந்த மக்கள் தொடர்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
இலங்கையிலிருந்து இதுவரை 1000 ஹஜ் யாத்திரையாளர்கள் அவ்வல் மதீனா சென்றடைந்துள்ளனர். செப்டம்பர் முதலாம் திகதி முதல் கடைசியாக மாதம் 6 ஆம் திகதி வரையுடன் ஏனைய ஹஜ் யாத்திரையாளர்கள் யாவரும் கட்டுநாயக விமானம் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்.
அரேபிய்யா அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் கடந்த மார்ச் மாதம் என்னுடைய தலைமையில் தூதுக் குழுவொன்று விஜயம் செய்தது. அதன் போது இலங்கைக்கு வழக்கமாக வழங்கும் ஹஜ் கோட்டாவை விட மேலதிகமாக கோட்டா தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் கோரிக்கைக்கு இணங்க குறைந்தளவு 4000 கோட்டாவாது கிடைக்குமென நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். எமது ஒப்பந்தத்திற்கு இணங்க வழக்கமாகக் கிடைக்கும் 2240 கோட்டாவே இம்முறை எங்களுக்கு கிடைத்துள்ளது.
எனினும் மேலதிக கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்காக றமழான் மாதத்திலிருந்து ஜனாதிபதி ஊடாகவும் பிரதமர் ஊடகவும், சவூதி அரேபிய்யாவிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் ஊடாக முயற்சிகள் செய்தோம். எமது சவூதியிலுள்ள இலங்கைத் தூதுவர் சந்தித்த போது பாதுகாப்புக் கருதி மேலதிக கோட்டாவை வழங்குவது தொடர்பாக கடுமையாக பரிசீலனை செய்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலதிகமான கேட்டா கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் முகவர்களிடம் கட்டணங்களை செலுத்தியுள்ளார்கள். ஆனாலும் மேலதிகமான கோட்டா கிடைக்குரை வரை முகவர்களுக்கு மக்கள் கட்டணங்களை செலுத்த வேண்டாம் என நாங்கள் முஸ்லிம் சமய கலாசார அமைச்சின் ஊடகவும், திணைக்களத்தின் மூலமாகவும் ஹஜ் குழுவின் மூலமாகவும் ஊடாகவாயிலாக அறிக்கை விடுத்திருந்தோம்.
நாங்கள் அவ்வாறு தெரிவித்திருந்தும் கவலை தரும் விடயமாக முகவர்களிடம் மக்கள் பணங்களை செலுத்தியுள்ளதாகவும் அவர்கள் தம் பிரதேசங்களிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று ஹஜ் விளக்கங்கங் பெற்றுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு கட்டணங்களை செலுத்திய நபர்கள் முஸ்லிம் சமயம கலாசாரத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவித்து அப்பணங்களை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அடுத்த வருடம் மேலதிக கோட்டாவை எதிர்பார்த்த மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்
Post a Comment