Header Ads



குளவித் தாக்குதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர், வைத்தியசாலையில் அனுமதி

விடுமுறையைக் களிப்பதற்காக நுவரெலியாவுக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த, நுவரெலியாவுக்கு சென்று விடுதியொன்றில் தங்கியிருந்தார்.  

தனது நண்பர்கள் சிலருடன் விடுதிக்கு முன்பாக இருந்து சனிக்கிழமை மாலை பேசிக்கொண்டிருந்த போதே, 

விடுதியில் குளவி கூட்டிலிருந்த குளவிகள் திடீரென கலைந்து, கொட்டியுள்ளன.  இதில் காயமடைந்த அந்த எம்.பி  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.