ஜாதிக ஹெல உறுமயவில் "வெடிப்பு"
ஓமல்பே சோபித தேரர், அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான ஓமல்பே சோபித தேரர் கட்சியில் இருந்து விலகும் நிலையில், அந்த கட்சியில் உள்ள சிரேஷ்ட தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக்கொள்வார் என தெரியவருகிறது.
இரண்டு தேரர்கள் கட்சியில் இருந்து விலகிய பின்னர், பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தான மற்றும் மைத்திரி குணரட்ன ஆகியோர் ஜாதிக ஹெல உறுமயவில் இணைந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழுவில் அங்கம் வகிக்கும் மேலும் சில உறுப்பினர்கள் தமது பதவிகளில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர் தெபுவன பியனந்த தேரர், சர்வதேச விவகார செயலாளர் நரேந்திர குணதிலக்க, இளைஞர் விவகார செயலாளர் சுமித் வெலிவத்த ஆகியோர் பதவிகளில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் ஜாதிக ஹெல உறுமயவின் செயற்குழுக் கூட்டத்தில் இவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்படுகிறது.
மீண்டும் தம்மை பதவிகளுக்கு நியமிக்க வேண்டாம் எனவும் எதிர்காலத்தில் தம்மால் கட்சியின் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது எனவும் அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.
Post a Comment