Header Ads



பலதார மணம் ஒரு வரம், சாபம் அல்ல - உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய தனிநபர் ஆணையம் மனு

இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி பலதார மணம் என்பது ஒரு வரமே  ஒழிய அது ஒரு சாபம் அல்ல  என்று இஸ்லாமிய திருமண சட்டங்களை  எதிர்த்து  உச்சநீதி மன்றத்தில தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அனைத்திந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

இஸ்லாமிய பெண்களின்  திருமணம், விவாகரத்து அதற்குப்  பிறகான பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் அவர்களது உரிமைகள்  குறித்தது தெளிவுபடுத்தும் பொருட்டு, உச்ச நீதி மன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது அந்த வழக்கில் அனைத்திந்திய இஸ்லாமியர் தனி நபர் சட்ட ஆணையத்தையும் மனுதாரராக இணைத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அந்த வழக்கில் இஸ்லாமியர் தனி நபர் சட்ட ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருந்தாத்தாவது:

பொதுவாகக் கருதபப்டுவதை போன்று இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி பலதார மனம் என்பது ஒரு வரமே  ஒழிய அது ஒரு சாபம் அல்ல.அப்படியொரு வசதி இல்லாவிட்டால் ஒரு இஸ்லாமியரால் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்ய இயலாது. எனவே முறை தவறிய உறவுகளில் ஈடுபட நேரிடும்.

ஆண்கள் எப்பொழுது தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்திடும் வல்லமை பெற்றவர்கள். அவரகள் எந்த ஒரு  முடிவையும் அவசர கதியில் எடுக்க மாட்டார்கள். மேலும் இஸ்லாமிய சமூகத்தில் மட்டுமே பலதார மணம் அதிகரித்திருப்பதாக ஒரு தவறான எண்னம் இருக்கின்றது. ஆனால் உண்மை அதுவல்ல. நிறைய சமூகங்களில் பலதார மணம் புரியும் போக்கு அதிகரித்திருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் தனி நபர் சட்டங்களை இன்னொரு மதத்தின் சட்டத்தோடு  இணைத்து ஒப்பிட முடியாது. ஏனென்றால் ஒவ்வொரு மதமும் தன்னளவில் தனித்தன்மை வாய்ந்தது.

அதேபோல் இது போல் தனிநபர் சட்டங்கள் குறித்த விஷயத்தில் பாராளுமன்றம் மட்டுமே தலையிடமுடியுமே தவிர, நீதிமன்றங்கள் தலையிட முடியாது.

இவ்வாறு அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Humans are given restricted sense by the almighty Allah. Allah know ins and outs about all his creation. Hence man cannot poke his nose into God's command.

    ReplyDelete

Powered by Blogger.