Header Ads



அதாவுல்லாவுக்கும், அப்துர் ரஹ்மானுக்கும் பாராட்டுக்கள் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

கடந்த 11-09-2016 ஞாயிறு இரவு வசந்தம் தொலைக்காட்சி  நடத்திய'அதிர்வு' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் கிழக்கு  மாகாணம் வடக்குடன் இணையக்கூடாது என்பதற்கான உண்மையான , உறுதியான  தர்க ரீதியான நடைமுறை  யதார்த்தங்களின்  அடிப்படையில் கிழக்கு மக்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும்  வகையில் எடுத்துக் கூறியகாரணங்கள் அனைத்தும் வலுவானதும்  வரவேற்கத் தக்கதுமாகும்.அவர் எடுத்துக் கூறிய வரலாற்று உண்மைகள் அவரின்நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்டியுள்ளன. அதற்கு எமது பாராட்டுக்கள். இதேதொனியில் வாதிட்ட நால்லாட்சிக்கான சமூக அமைப்பின் அமைப்பாளர் சகோ.அப்துல் ரகுமானையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்குப் பிறகு – ஹக்கீமின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய அக் கட்சியின் அதிஉயர்பீடத்தில் தவிசாளராக சகோ.அதாவுல்லாஹ் அவர்களும் ,  செயலாளராக டாக்டர் ஹப்ரத்தும்,  மசூராசபையின் தலைவராக (எஸ்.சுபைர்தீன்) நானும்,  பொருளாளராக இன்றைய கிழக்கின் முதலமைச்சர் சகோ.ஹாபீஸ் நசீரும் இருந்தபொழுது; அன்றைய ஐ.தே.முன்னணி (U.N.F) அரசாங்கம் நோர்வேயின் மத்தியஸ்துடன் புலிகளுடன் பேரம் பேசி ஒரு யுத்த நிறுத்த உடன்பாட்டை  ஏற்படுத்தியது.  அதன்பிரதிபலனாக புலிகள் வடகிழக்கில் ஆயுதங்களுடன் நடமாடமுடிந்ததோடு – பொலிஸாருக்கும்  இராணுவ த்திற்கும்  அவர்களைகைது செய்யவோ – ஆயுதங்களை களையவோ முடியாத நிலையொன்று ஏற்பட்டிருந்தது. புலிகள் தங்கள் பதுங்குமிடத்திலிருந்து வெளிவந்து விசேடமாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை கடத்தவும் ,  பயமுறுத்தி கப்பம் பெறவும் முஸ்லிம்களை கொலை செய்யவும் தொடங்கினர் –பொலிஸில் முறையிட்டும் – பொலிஸாரும்;  இராணுவமும் எதுவித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு நிலையில் இருந்தனர். கிழக்கு முஸ்லிம்களின் அவலநிலை கேட்போர் யாருமின்றி சூனியமாக நின்றது. முஸ்லிம்களின் உயிர்கள் புலிகளினால் பகிரங்கமாகப் பறிக்கப்பட்டன. முஸ்லிம்களின் உயிருக்கு மட்டுமல்ல பிணங்களுக்கும் (மையத்) மரியாதயிருக்கவில்லை. வாழைச்சேனையில் அநியாயமாக கொலைசெய்யப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் ஜனாசாக்களை அவற்றின்    பெற்றோர் கோரிய போதும்  பொலிஸார் மற்றும்யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள்முன்னிலையிலேயே  அவை புலிகளால்  எரிக்கப்பட்டன..திருகோணமலையில்;  ; உறவினர்கள் முன்னிலையிலே முஸ்லீம்களின் ஜனாசாக்களின்  கண்களைப்  புலிகள் பிடுங்கிஎடுத்தனர்.  இந்த மாறாத உண்மைகள் உறங்குவதில்லை. 

இவ்வாறு அநியாயம் நடந்து கொண்டிருந்த ஒரு சூழலில் மு.கா.வின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட U.N.F அரசாங்கத்தில் மு.கா.தலைவர் ஹக்கீம் ஐந்து முக்கியமான அமைச்சுக்களை தாங்கிய அமைச்சராக இருந்த போது முஸ்லிம்களுக்கு புலிகளால் நடந்துக் கொண்டிருந்த அட்டூழியங்களுக்கு பரிகாரம்  தேடமுடியாத – நிலையில் அவர் இருந்தார். அவருடைய செயற்பாடேல்லாம் U.N.F – புலிகள் ஒப்பந்தம் தொடரவேண்டும் என்பதாகவே இருந்தது.

அரசாங்கமும் புலிகளும் யுத்த நிறுத்தத்தின் பின்பு – டோக்கியோ –ஒஸ்லோ  - பாங்கொக்  ஆகிய நகரங்களில் பேச்சுவார்த்தைகள்நடைபெற ஏற்பாடுகள் நடந்தன. முஸ்லிம்கள் சார்பில் மு.கா. –தனித்தரப்பாக இதில் இடம்பெற வேண்டுமென மு.கா. பாராளுமன்ற உறுப்பினர்களும் – உயர்பீடமும் வலியுறுத்தின. இதன் விளைவாக ஹக்கீம் தனியாக பிரபாகரனை சந்திக்கச் சென்று தனித்தரப்பு வழங்க சம்மதம் தெரிவித்ததாக சொன்னார். ஆனால்இ பேச்சுவார்த்தையில் தனிதரப்பின்  அரசாங்கபிரதிநிதியாகவே  கலந்து கொண்டார். இந்த இரட்டை வேசத்துக்குஎதிராக மு.கா. தலைவரிடம் பல கேள்வி கணைகளைசகோ.அதாவுல்லாஹ் தொடுத்தார் என்பது உண்மையே. உண்மைகள் உறங்குவதில்லை தான்;. 

ஹக்கீம் பிரபா ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனம் அடகுவைக்கப்பட்டது. இது முஸ்லிம்கள் மத்தில் மனக்குமுறலை ஏற்படுத்தியது. அன்று 2002 ஜூலை மாதம் மு.கா.வின் அதி உயர் பீடம் ஹக்கீம் தலைமையில் இடம் பெற்றபொழுது அதாவுல்லாஹ் பின்வருமாறு கதறி அழுதார்;.ஹக்கீமப் பார்த்து அவர் 'இதோ இவர் தான் புலிகளின் தலைவர் ! இங்கே இருக்கிறார் ! இந்த அதிஉயர்பீட கூட்டத்தில் இருக்கின்ற  எவரும் எனக்கு முக்கியமில்லை. இரண்டு பேர்கள் ; தவிர. மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மறையும்போது எங்களுக்கு இருவரை மாத்திரம்தான் தந்திருக்கின்றார்கள். ஒருவர்  சுபைர்தீன் ஹாஜியார்.மற்றவர் னுசு.ஹப்ரத் அவர்கள். சுபைர்தீன் ஹாஜீ.......  !னுசு.ஹப்ரத்....... ! இதோ உங்கள் முன் நான் கண்ணீர் வடிக்கிறேன். ' இந்தக் கண்ணீர் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கண்ணீர். இந்தக் கண்ணீரால் உங்கள் கால்களை கழுவிக் கேட்கிறேன். எங்களை இந்தப் புலிகளிடமிருந்து காப்பாற்றுங்கள் ' மேலே கூறப்பட்டது  அவரின் வாயில் இருந்து வந்த உள்ளக்குமுரல்களைக் கக்கும்  வார்த்தைகள். அந்த வார்த்தைகள் எனதுஉள்ளத்தை உருக்கியது. ஏனெனில்  உண்மைகள் ஒருபோதும்உறங்குவதில்லை.

இதனைத் தொடர்து – ஹக்கீம் புலிகளுடன் ஒஸ்லோவில் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது – 37 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவசரமாகக் கூடிய மு.கா. அதிஉயர்பீடம் ஹக்கீமை பதவி நீக்கம் செய்துவிட்டு ளு.சுபைர்தீன் அவர்கள் மு.கா. தலைவராக பிரகனப்படுத்தியது. எனக்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவு பெறும்  வரையில் – ஏறக்குறைய 2 வாரங்கள் நானே மு.கா. 3 வது  தலைவராக இருந்தேன். தடையுத்தரவுக்குப் பிறகும்ஏறக்குறையமூன்று மூன்று மாதங்கள் இரட்டைதலைமைத்துவத்தின் கீழ் இயங்கினோம். இதற்கு எதிராகநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தோம். 

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றோம். அதன் பிறகு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து  கட்சி மேலும்கூறாகக்கூடாது என்பதற்காகவும் சமுதாய நலன் கருதியும் –வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 

25.02.2003 இல் அஷ்ரப் காங்கிரஸ் என்ற பெயரில் எமது அமைப்பு இயங்கத் தொடங்கியது. அதன் தலைவராக நானும் (ள.சுபைர்தீன்) தவிசாளராக  ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வும் , செயலாளராக னுசு.ஹப்ரத்தும் பொருளாளராக ஹாபீஸ் நசீரும் இயங்கினோம். இதில் உயர் பீட அங்கத்தவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான காலஞ் சென்ற நூர்தீன் மசூர்  மொஹிதீன் அப்துல் காதர்,  , எம். வீ. ஏ. அஸீஸ், மசூர் மௌலானா ஆகியோருடன்   னுசு உதுமா லெவ்வையும்  , முன்னாள் கொழும்பு மேயர்  எ. ஜே. எம்.  முஸம்மிலும்  இருத்தனர். 

11-09-2016  அன்று  'அதிர்வு' தொலைக்காட்சி நிகழ்வில் அஷ்ரப் காங்கிரஸ் புரட்சிகர தோற்றம் பற்றி கூறுவதற்கு சகோ.அதாவுல்லாஹ்  மறந்திருக்கக் கூடும். அஷ்ரப் காங்கிரஸின்தோற்றம்  முஸ்லிம் அரசியலில் ஒரு திருப்பு முனையாகஅமைந்தது  என்றால் அது மிகையாகாது.  நிகழ்வுகள் வரலாராகமாறினாலும் உண்மைகள்  உறங்குவதில்லை என்பதும்உண்மையே. 

நான் அஷ்ரப் காங்கிரஸ் தலைவராக இருந்தபொழுது  30.05.2003 ல் என்னால் விடப்பட்ட  பகிரங்க ஊடக அறிக்கையில்சகோ.அதாவுல்லாஹ்வின் ஊந்துதல் காரணமாக வடக்கும்கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என்று  கூறியிருந்தேன்அன்று நான் சகோ. அதாவுல்லாவுடன் சேர்ந்து முழங்கிய உரிமைக் குரல் என்றும் ஓயாது. ஏனெனில் உண்மைகள் உறங்குவதில்லை. 
அன்றைய 'அதிர்வு' நிகழ்ச்சியில் கிழக்கின் உள்ளக் குமுரலையும்;எழுப்பிய அதாவுல்லாஹ்வுக்கும் சகோ.அப்துல் ரகுமானுக்கும் எனது பாராட்டுக்கள். ஏனெனில் , உண்மைகள்  உறங்குவதில்லை.மேலும் ,  உண்மைகள் எப்போதும் ஊமையாக இருப்பதுமில்லை.

S. சுபைர்தீன்.
செயலாளர் நாயகம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

22 comments:

  1. வரலாறு என்பது நினைவு கூறுவதில்தான் கூர்மை பெறுகின்றது ! தலைவரின் பின்னர் மரமானது கனி கொடுக்காவிடினும் நிழலாவது தருமா ? தற்போதைய தலைவர் (சார்பாய் யாராவது ) பதில் தருவாரா ??
    சுபைர்டீன் ஹாஜி உங்களிடமுள்ள அனுபவங்கள் சமூகத்திற்கு பயனாய் அமைவதாக ........

    ReplyDelete
  2. kilakkil piranthanukkuthaan kilakku makkalin pirachinai therium. Hakeemukku theriuma?

    ReplyDelete
  3. சுபைதீன் அவர்களே, சகோதரர் அதாவுல்லா அவர்களை போல் ஆயிரம் பேர் வடக்கும் கிழக்கும் பிரிந்த்துதான் இருக்க வேண்டும் என்று அந்த கால கட்டத்தில் கூறியும் உள்ளார்கள், பல கூட்டங்களும் நடத்தி உள்ளார்கள். நிறைய சமூக ஆர்வலர்களும் , புத்தி ஜீவிகளும்; சிங்கள அரசியல் வாதிகள் என்று, வெளிநாட்டு ராஜதந்திரிகள் என்று தங்களுக்கு முடிந்த வகையில் முஸ்லிம்களுக்கு ஏட்படப்போகும் இழப்புகளையும், உரிமை மறுப்புக்களையும்; ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் தனித்தரப்பு, வடகிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் பாதுகாப்பு, என்று பல விடயங்களை எடுத்து கூறியுள்ளார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் அதாவுல்லா அவர்களும். ஒஸ்லோவில் நடந்த கூத்துக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரிக்கா ( கதிர்காமநாதரின் வழிகாட்டலுக்கு அமைய என்றும் கூறலாம்) ரணிலின் அரசாங்கத்தை களைத்து விட்டவர். இந்த வடகிழக்கு பிரிந்த்ததுக்கும் அதாவுல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம்களின் உரிமை பற்றி பீற்றிக்கொள்ளும் நீங்கள், அதாவுல்லா, ஹக்கீம், றிசாத், ஹிஸ்புல்லாஹ், பெளவுசி....etc. எல்லோரும் ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் ராஜபக்சவுடன் மிகவும் நன்றாக ராஜா போகம் அனுபவித்துக்கொண்டு இருந்தவர்கள் தான். ஆனால் முஸ்லீம் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பது யாரும் அறிந்த விடயம். ஆனால் நீங்கள் பீட்ரிக் கொள்ளும் அதாவுல்லா அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உலகம் அறிந்த விடயம். ஆனால் முழு முஸ்லீம் மக்களும் மைத்திரியை ஆதரிப்பதட்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட றிஷாத்தும், ஹக்கீமும் ( ராஜபக்சவிடம் அனுபவிப்பதையெல்லாம் அனுபவித்து விட்டு; ஒரு முஸ்லிமால் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்பது எமக்கு தெரியாது..???..!!! ) துண்டை காணோம் துணியை காணோம் என்று மைத்திரியிடம் ஓடோடி வந்தார்கள்.

    "கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டும் என்பானாம்."

    மாற்றம் தேவை; புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் இந்த மாற்றத்துக்கு முயட்சிப்பார்களா???

    ReplyDelete
  4. சுபைதீன் அவர்களே, சகோதரர் அதாவுல்லா அவர்களை போல் ஆயிரம் பேர் வடக்கும் கிழக்கும் பிரிந்த்துதான் இருக்க வேண்டும் என்று அந்த கால கட்டத்தில் கூறியும் உள்ளார்கள், பல கூட்டங்களும் நடத்தி உள்ளார்கள். நிறைய சமூக ஆர்வலர்களும் , புத்தி ஜீவிகளும்; சிங்கள அரசியல் வாதிகள் என்று, வெளிநாட்டு ராஜதந்திரிகள் என்று தங்களுக்கு முடிந்த வகையில் முஸ்லிம்களுக்கு ஏட்படப்போகும் இழப்புகளையும், உரிமை மறுப்புக்களையும்; ஒஸ்லோ பேச்சு வார்த்தையில் தனித்தரப்பு, வடகிழக்கு இணைப்பு, முஸ்லிம்களின் பாதுகாப்பு, என்று பல விடயங்களை எடுத்து கூறியுள்ளார்கள். அப்படியானவர்களில் ஒருவர் தான் அதாவுல்லா அவர்களும். ஒஸ்லோவில் நடந்த கூத்துக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரிக்கா ( கதிர்காமநாதரின் வழிகாட்டலுக்கு அமைய என்றும் கூறலாம்) ரணிலின் அரசாங்கத்தை களைத்து விட்டவர். இந்த வடகிழக்கு பிரிந்த்ததுக்கும் அதாவுல்லாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். முஸ்லிம்களின் உரிமை பற்றி பீற்றிக்கொள்ளும் நீங்கள், அதாவுல்லா, ஹக்கீம், றிசாத், ஹிஸ்புல்லாஹ், பெளவுசி....etc. எல்லோரும் ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் ராஜபக்சவுடன் மிகவும் நன்றாக ராஜா போகம் அனுபவித்துக்கொண்டு இருந்தவர்கள் தான். ஆனால் முஸ்லீம் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பது யாரும் அறிந்த விடயம். ஆனால் நீங்கள் பீட்ரிக் கொள்ளும் அதாவுல்லா அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உலகம் அறிந்த விடயம். ஆனால் முழு முஸ்லீம் மக்களும் மைத்திரியை ஆதரிப்பதட்கு முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட றிஷாத்தும், ஹக்கீமும் ( ராஜபக்சவிடம் அனுபவிப்பதையெல்லாம் அனுபவித்து விட்டு; ஒரு முஸ்லிமால் இப்படியெல்லாம் அரசியல் செய்ய முடியுமா என்பது எமக்கு தெரியாது..???..!!! ) துண்டை காணோம் துணியை காணோம் என்று மைத்திரியிடம் ஓடோடி வந்தார்கள்.

    "கேட்பவன் கேனப்பயல் என்றால் எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓட்டும் என்பானாம்."

    மாற்றம் தேவை; புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், இளைஞர்களும் இந்த மாற்றத்துக்கு முயட்சிப்பார்களா???

    ReplyDelete
  5. இந்த முஸ்லிம் காங்கிரஸை வளர்த்த்தில் எங்களுக்கும் பங்கு இருக்கவே செய்யுது,இப்போது இருக்கும் இந்த ஹக்கீமை நாங்கள் ஏன் தூக்கி எறிய முடியாது இவனை தலைவர் பதவியில் ஏன் எங்களால் இறக்க முடியா்து இவனை துரத்தி விட்டு வேறொருவரை தலைவனாக ஆக்குவோம் அல்லது எங்கள் முஸ்லிம் காங்கிரஸை நாங்களே எங்கள் கைகளால் அழித்து விட்டு வேறொரு கட்சியை ஆதரித்து அதைப்பலப்படத்துவோம் வேறு வழியில்லை அதை நாங்கள் அவசரமாக செய்வோம்,முஸ்லிம் காங்கிரஸையும் அதனுடன் சேரந்தவர்களையும் நிராகரிப்போம்,எங்கள் உரிமையை பாதுகாக்க நாம் ்கிளர்ந்து எழுவோம்,இது ஒரு இக்கட்டான நிலமை இதில் நாங்கள் பிந்தக்கூடாது,இந்த ஹக்கீமை நாங்கள் இன்னும் நம்பினால் இவன் கோடிக்கணக்கில் வாங்கிக்கொண்டு எங்கள் ்சமூகத்தை விற்று விடுவான்,சமூகமே நன்றாக சிந்தியுங்கள் எங்கள் முஸ்லிம் காங்கிரஸ் நாங்கள் உருவாக்கியதுதான் அது இப்போது அகப்பட்டு இருக்கும் இடம் ரொம்ப ஆபத்்தானது எங்களுக்கு இப்போது முஸ்லிம் காங்கிரஸ் முக்கியம் அல்ல எங்கள் உரிமை முக்கியம் எங்கள் உரிமையை இந்த பயங்கர பேரவழியும் இவனுடன் சேர்ந்்து வயிறு நிறப்பும் கூட்டமும் விற்று விடுவார்கள் எச்சரிக்கை ஆகவே அவசர முடிவு எடுப்போம் சிந்தியுங்கள் சகோதரர்களே நானும் உங்களின் ஒருவன்,இந்தக்கட்சிக்காக பாடுபட்டவன்

    ReplyDelete
  6. இதுவெல்லாம் நொண்டிச்சாட்டுகள். காரணங்கள்;
    (1) LTTE இப்போது இல்லை.
    (2) LTTE கும் தற்போதைய தமிழர்களுக்கும் சம்மந்தம் ஒன்றும் கிடையாது.
    (3) LTTEயின் கொள்கைகளை TNA தலைவர்கள் அப்போது எதிர்திருந்தால் இப்போது இருந்திருக்கமாட்டார்கள்.
    (4) அமைச்சரகளாக இருப்பவர்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கமே. எனவே அவர்கள் எந்த உத்தியோகபூர்வ பேச்சுவார்தைகளிலும் அரசாங்கதரப்பாக கலந்து கொள்வது தான் ஜனநாயக முறை.

    வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பதற்கான உண்மையான காரணம். கடைசி வரை ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்துவிட்டு, பின்னர் வந்து பங்கு கேட்பதும், குழப்புவதும், எதிர்ப்பதும் இவர்களுடைய பிறவிகுணம். காலம்காலமாக செய்கிறார்கள்.

    இதணால் தான் இலங்கை, இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, அமேரிக்கா எல்லா இடமும் பிரச்சனைகள்.

    ReplyDelete
    Replies
    1. எவரும் எவ்வித பங்கும் கொடுக்கத் தேவையில்லை. தனித்தனியாக இருந்துவந்த தற்போதும் இருக்கின்ற வடக்கையும் கிழக்கையும் அது இருந்த மாதிரியும் இருக்கின்ற மாதிரியும் தொடர்ந்தும் இருக்கவிட்டால் போதும். அதை விட்டுட்டு வேற கதையளந்தால் அந்தக்கதை முஸ்லிங்களதும் சொந்தக்கதை என்பதால் அது பற்றி பேசுவதற்கு முஸ்லிங்களுக்கும் முழு உரிமை உள்ளது. இதை ஏற்க மறுக்கும் எந்த சக்தியாலும் எதையுமே புடுங்க முடியாது என்பதே உறுதியான யதார்த்தம்.

      Delete
  7. Antony யார் வீட்டை யார் பங்கு கேட்பது? வடக்கிலுள்ள முட்டாள் தமிழனுக்கு என்ன அறுகதையுண்டு எம்மிடம் கிழக்கை கேட்க? உங்களை நாங்களா ஆயுதம் ஏந்த சொன்னோம்? நீங்கள் போராட்டம் என்கிற பெயரில் தீவிரவாதம் செய்வீர்கள் அதற்க்கு நாங்கள் எங்கள் சொந்த நிலங்களில் இருந்துகொண்டு ஆதரவு வேறு கொடுக்கணுமா? உண்மையில் ஹிந்துக்களை விட கிருஸ்த்துவர்களுக்கே ஈழ அரிப்பு அதிகமாகவுண்டு. காரணம் தென்னாசியாவில் கிறிஸ்த்துவ தேசம் ஒன்று இல்லாத குறை

    ReplyDelete
    Replies
    1. பெயரைகூடமுழுமையாக போட தைரியமில்லாத நீர் தமிழர் போராட்டதை விமர்சிக்கிறீர்.எல்லாம் காலம் நண்பரெ! பூனை இளைத்தால் எலி க்கு கொண்டாட்டமாம்.
      தங்கள் கனிவான கவனத்திற்கு
      கிழக்கில் தமிழர் பெரும்பான்மமை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை முஸ்லீம்களும் பெரும்பான்மை இல்லை.ஆகவெ கிழக்குக்கு எகபோக உரிமை கொண்டாட வேண்டாம் .
      வேலு நாச்சியார்.,குளக்கொட்டன் ஆண்ட பூமி கிழக்கு

      Delete
    2. அதர்மம் செய்தால் - நிணைத்தால் எந்த பூனையோ புலியோ இளைப்பது மட்டுமல்ல தொலைந்தே போக நேரிடும்.நடந்தவை போதும். இன்னும் இன்னும் அவற்றை நிணைக்காதீர்கள். பாவம் தமிழ் மக்கள்.

      Delete
    3. ஜீகாத்தொலைந்தது போல் தானெ நண்பரே!!

      Delete
  8. Antoniraj, கிழக்கு பிரிந்து இருக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கான பிரச்சினை மட்டும் இல்லை அது கிழக்கில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சினை. யாழ்பாணத்து அரசியல் வாதிகள் கிழக்கையும் அதன் பொருளாதாரத்தையும் பகிர்ந்து கொள்வதட்கான ஒரு முயட்சியே இது. மிகவும் அதிகமான மட்டக்களப்பு தமிழர்கள் கிழக்கும் வடக்கும் இணைவதனை விரும்புவதில்லை. கருணா, இராசதுரை, தேவநாயகம்,.....என்று நிறைய விடயம் பேசலாம். எனவே இது கிழக்கு மக்களின் பிரச்சினை. வடகிழக்கு இணைவது என்பது ஒருகாலமும் நடக்காத ஒரு விடயம். இந்த விடயத்தை பேசி காலத்தையும், அரசியல் தீர்வையும் வீணடித்து விடாதீர்கள்.

    ReplyDelete
  9. Antoniraj, கிழக்கு பிரிந்து இருக்க வேண்டும் என்பது முஸ்லிம்களுக்கான பிரச்சினை மட்டும் இல்லை அது கிழக்கில் வாழும் அனைத்து மக்களுக்குமான பிரச்சினை. யாழ்பாணத்து அரசியல் வாதிகள் கிழக்கையும் அதன் பொருளாதாரத்தையும் பகிர்ந்து கொள்வதட்கான ஒரு முயட்சியே இது. மிகவும் அதிகமான மட்டக்களப்பு தமிழர்கள் கிழக்கும் வடக்கும் இணைவதனை விரும்புவதில்லை. கருணா, இராசதுரை, தேவநாயகம்,.....என்று நிறைய விடயம் பேசலாம். எனவே இது கிழக்கு மக்களின் பிரச்சினை. வடகிழக்கு இணைவது என்பது ஒருகாலமும் நடக்காத ஒரு விடயம். இந்த விடயத்தை பேசி காலத்தையும், அரசியல் தீர்வையும் வீணடித்து விடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆடு நனயுதெண்டு ஓநாய் கவலை.!!
      கிழக்கில் தமிழர் நிலங்களை அபகரிக்கவே இந்த கரிசனை ,
      கல்முனை சம்மாந்துறை நிந்தாவூர் என பிரிந்து நிற்க நாம் மமுஸ்லீம்களா.??
      கிழக்கில் கடந்த 10வருட அனுபவம் தமிழர்களை விழிப்படைய வைத்துள்ளது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  10. அதாவுல்லா போன்ற தீர்க்க தரிசனம் உள்ள தலைவர்களிடம் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையை ஒப்படைக்க வேண்டும்

    ReplyDelete
  11. இந்திய விடுதலை க்காக இந்தியர்கள் போராடினர்.அகிம்சைவழி ஆயுதவழி என்று தியாகங்கள் செய்து ஆங்கிலேயரை பணிய வைத்தனர்.இந்தியா சுதந்திரமடைய போகிற தென்றதும்.விழித்த முஸ்லீம்கள் ஜீன்னா தலைமையில் தனி நாடு கோரினர் வங்காளத்திலலும் பஞ்சாப்பிலும் சிந்துவிலும் கலவரங்களை தூண்டீவிட்டு இந்தியாவுடன் வாழ முடியா தென்று ஓலமிட்டனர்.
    பகிஸ்தான் தராவிட்டால் கலவரம் வெடிக்குமமென்று இங்கிலாந்தில் வைத்துபகிங்க மிரட்டல் விட்டார் ஜீன்னா.கடைசியில் இந்துகளின் போராட்டத்தில் முஸ்லீம் நாடோன்று பிறந்தது.
    இதே உக்தியை இங்குள்ள முஸ்லீம்கள் பின்பற்று கின்றனர்.
    தம்மால் நேரடி யாக கொர தைரியமற்ற விடயத்தை தமிழரை காரணம் காட்டி பெறநினைக்கின்றனர்.
    இது தான் நேகாமல் நூங்கு தின்பதொ.??

    ReplyDelete
    Replies
    1. Kumaran,
      Don't distort the truth. Take the statistics that how many Muslims were physically involved in the freedom fight in India?
      How many Muslim leaders who were strenuously work hard to achieve the liberty in India?

      The bias indian medias intentionally hide these facts and don't let the general public to get to know about the past.

      Therefore Muslims are well-deserved for autonomy. I gently request you to explore Islam and become a Muslim to conquer in the afterlife.

      Delete
  12. Kumaar, நீங்கள் போராடினீர்கள் முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்தீர்கள், சொத்துக்களை சூறையாடினீர்கள், கொண்டீர்கள் இத்தனையும் ஆட்சி அதிகாரம் இல்லாமல் செய்தீர்கள், ஆட்சி அதிகாரம் இருந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஒரு இனம் அதனது பாதுகாப்பையும், பிரதேச, அரசியல் இருப்பையும் அதிகாரத்தையும் நோக்கி பயணிப்பது ஒரு இயல்பான விடயம். நீர் ஒழுங்காக இந்திய விடுதலை போராட்டத்தை படியும். அப்போது தெரியும் முஸ்லிம்களின் பங்கு என்ன என்பது. கிழக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் ஒருகாலமும் தங்களது பிரதேசத்தை, இன்னொரு பிரதேசத்துக்கு தாரை வார்த்து கொடுக்க மாட்டார்கள். பிரபாகரன் எப்படி இந்தியா கொடுத்த வாய்ப்பை சண்டித்தனத்தின் திமிரில் தட்டிக் கழித்தாரோ அதே மாதிரி இந்த நல்லதொரு அரசியல் தீர்வு கிடைப்பதட்கான சந்தர்ப்பத்தை வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வை கேட்பீர்களானால் கிடைக்க கூடிய கொஞ்சமும் கிடைக்காமல் போகும் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறோம். எமது இந்த பதிவை குறித்து வைத்துக் கொள்ளவும், எதிர்காலத்தில் உதவும்.

    ReplyDelete
  13. நண்பரே புலிகள் மட்டுமா இனசுத்திரிப்பு செய்தனர்.முஸ்லீம்கள் ஊர்காவல் படை செய்த அட்டுளியங்களை பட்டியலீடவா.புலிகள்குறித்து வாய்கிழிய பேசுபவர்கள் வசதியாய் ஜீகாத்தை மறந்து விடுகின்றனர்.
    அம்பாறையில் எத்தனைகோவில்கள் உடைக்கப்பட்டன, 10தமிழ்கிராமங்கள் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டன.இவற்றுக்காக சாதாரண முஸ்லீம்களை தமிழர் குறை கூற முடியுமா??

    ReplyDelete
  14. • கப்பல் ஓட்டிய வஉசி -க்கு அந்த கப்பலை ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கித்தந்தது யார்....?
    • நேதாஜிக்கு இந்திய தேசிய ராணுவம் அமைக்க, ஆயுதம் வாங்கவென்று ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு ஸ்பான்சர் செய்தது யார்....?
    • காந்திஜிக்கு தென் ஆப்ரிக்காவில் வேலை கொடுத்து... அங்கே போக வர வைத்து அவரை பிரிட்டிஷ் எதிர்ப்புக்கு தூண்டியவர் யார்....?
    • காங்கிரசின் சுதேசி கதர் ஆடையை கண்டுபிடித்தது யார்...?
    • ஆங்கிலேயரை எதிர்த்த முதல் இந்தியர் யார்..?
    • இந்திய தேசிய கோடியை வடிவமைத்தவர் யார்..?
    இதற்கான விடைகளைத் தேடிப்பார் அப்போது புரியும் முஸ்லிம்களின் இந்திய சுதந்திரத்துக்கான பங்களிப்பு என்னவென்று. உனக்கு வயதும் அனுபவமும் போதாது இவற்றை கிரகித்தறிவதற்கு, உனது சிந்தனைகள் சங்கபரிவார், ஆர் எஸ் எஸ் போன்ற கயவர்களின் சிந்தனையை ஒத்திருக்கிறன.
    [[ இந்திய விடுதலைக்காக இந்தியர்கள் போராடினார்கள், அகிம்சை வழி ஆயுதவழி என்று தியாகங்கள் செய்து ஆங்கிலேயரை பணியவைத்தனர்.]]
    வடிய கட்டிய முட்டாள் என்பதற்கு நீயே நல்ல உதாரணம். ஒன்றில் சொந்த புத்தி வேண்டும் அல்லது செல்வார் புத்தியாவது கேட்க வேண்டும், முதலில் இந்திய சுதந்திர வரலாற்றை ஐயமற படித்து விட்டு பின்னர் அதனைப் பற்றிப் பேசு.
    இந்திய சுதந்திரப் போராட்டம் வென்றதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அவர்கள் முஸ்லிம்களையும் அரவணைத்து நாம் இந்தியர்கள் என்ற இலக்கில் போராடியதாகும் , உன்னைப் போல், இரத்த வெறி பிடித்த புலிகளைப் போல் இனபேதமும், வர்க்க பேதமும் பேசி கூட இருந்தே குளிப்பறிக்க நினைக்கவில்லை, உன்னைப் போன்ற குறுமதியும் கோர குணமும் இழிய செயலும் கொண்ட தமிழர்கள் தான் (எல்லா தமிழர்களையும் குறிக்கவில்லை) முஸ்லிம்களை கருவறுக்கத் தொடங்கினார்கள், அதனை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம்.
    போராடட்ட குழுக்களில் கணிசமான முஸ்லிம்களும் இருந்தது உன்னைப்போன்ற அறிவிலிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆரம்பக்காலத்தில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடக்கும் போது, களத்தில் முன் வரிசைப் படையணியில் முஸ்லிம் போராளிகளை நிறுத்தி அவர்களை திட்டமிட்டு அழிக்கத் தொடங்கிய போது விழித்துக் கொண்ட முஸ்லிம் போராளிகள், போராட்டக் குழுவிலிருந்து வெளியேறினர் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?
    நாங்கள் அமைதியாய் இருப்பதால் நீங்கள் செய்வதெல்லாம் நியாயமாகி விடாது.
    ஆம்...நாங்களும் கருவறுத்தோம் அது எங்கள் தற்பாதுகாப்பிற்கானது. வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெறுங்கையுடன் வெளியேற்றி கொள்ளை அடித்தது போல் கிழக்கிலும் செய்வதற்கு போஸ்டரும் நோட்டீசும் போட்டு காலக் கெடு கொடுத்தபோது நாங்களும் கருவறுத்தோம். துப்பாக்கி நீங்கள் சுட்டால் மட்டும்தான் சுடுமா? அல்லது வெட்டருவாள் நீங்கள் வெட்டினால் மட்டும்தான் வெட்டுமா? ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட நாங்கள் என்ன ஈசனின் பிள்ளைகளா? நாங்கள் இஸ்லாமியர்கள் எங்களை நாங்கள் காத்துக்கொள்ள காத்திரமான நடவடிக்கைகளை எடுத்தோம், அப்போதுதான் உங்களுக்கும் அடுத்தவர் வலி புரிந்தது.
    உன்னைப்போன்ற முட்டாள்களுடன் கருத்தாடுவது மிகப்பெரிய கொடுமை.

    ReplyDelete
  15. நன்றி இப்பதிவையே நான் எதிர்பார்தேன்.
    ஆக முஸ்ஸ்லீம்கள் இந்திய விடுலையில் ஈடுபட்டும் தமது சுயத்தைபாதுகாக்க பிரிந்தது சரி என்றால் ஏன் தமிழர் பிரிய கூடாது.70%முஸ்லீம்கள் தெற்கில் வாழ்வதற்காக தமிழர் அடடிமையாய் சிங்களவனுக்கிழ் கிடக்க வேண்டும் என நினைக்கும் ந.நீர் தான் பாசிசவாதீ.

    ReplyDelete

Powered by Blogger.