Header Ads



துமிந்தவை பார்வையிட, படையெடுக்கும் மக்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை பார்வையிட அரசியல் பிரபலங்கள் உட்பட பொதுமக்களும் சிறைச்சாலைக்கு படையெடுத்து வருகின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக தற்போது வரை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் பாரிய மக்கள் கூட்டம் ஒன்று வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

எப்படியிருப்பினும் அந்த நபர்களுக்கு துமிந்த சில்வாவை சந்திப்பதற்கு சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு தனது உறவினர் அல்லது நண்பருக்கு வாரத்திற்கு ஒரு நாள் மாத்திரம் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும். அது 30 நிமிடங்களுக்கு மாத்திரமே இவ்வாறு சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படும்.

அதற்கமைய துமிந்தவை பார்ப்பதற்கு வந்த மக்களை திருப்பி அனுப்புவதற்கு சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

துமிந்த சில்வாவை வெலிக்கடையில் தடுத்து வைத்திருப்பதன் காரணமாக சிறைச்சாலையின் ஆரம்ப நுழைவாயிலில் பாதுகாப்பை அதிகரிக்க சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.