மைத்திரி - கோத்தா இரகசிய சந்திப்பு, ஆச்சரியத்தை ஏற்படுத்தியது..!
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசியமாக இடம்பெற்ற இந்த சந்திப்பை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட ஏற்பாடு செய்திருந்தார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
இதன்போது கோத்தபாய கூறிய விடயங்களுக்கு மற்றும் யோசனைகளுக்கு மைத்திரிபால சிறிசேன,
எவ்வித பதில்களையும் உறுதிமொழிகளையும் வழங்காமல் வெறுமனே செவிமடுத்துக்கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜபக்ஸ தரப்பினர் மீது மேற்கொள்ளப்படும் தொந்தரவுகளை நிறுத்தும்பட்சத்தில் தாமும், தமது சகோதரான சமல் ராஜபக்சவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளை முன்னெடுத்துச்செல்ல தயாராக உள்ளதாக கோத்தபாய கூறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்ற அடுத்த நாளே, கோத்தபாயவுக்கும் ஏனைய 8 பேருக்கும் எதிராக இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினால் மேலதிக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனவே இது ஆச்சரியத்தை தரும் செய்தியாக அமைந்திருப்பதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Post a Comment