Header Ads



ஹஜ் யாத்திரை குறித்து, இஸ்லாமிய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அயதுல்லா கமேனி


ஆண்டுதோறும் இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்படும் ஹஜ் புனித யாத்திரை நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பாக, செளதி அரேபியா நிர்வாகத்தின் மீது ஈரானின் உயரிய மதத்தலைவர் அயதுல்லா கமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை, செப்டம்பர் 11-ம் தேதி துவங்கும் நிலையில், ஈரானியர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள்.

இந் நிலையில், அயதுல்லா கமேனி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹஜ் யாத்திரை நடத்தப்படும் விதம் குறித்து அடிப்படை ரீதியாக இஸ்லாமிய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அயதுல்லா கமேனி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது, ஏற்பட்ட நெரிசலில் நூற்றுக்கணக்கான ஈரானியர்கள் உள்பட, ஏராளமான யாத்ரிகர்கள் கொல்லப்பட்டனர். செளதி அரேபியாவின் மெக்கா நகருக்குத்தான் இந்த ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

அங்கு நடக்கும் உயிரிழப்புக்களுக்கு செளதி அரேபியாவின் நிர்வாகக் கோளாறுகள்தான் இதற்குக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியது. "அல்லாவின் பாதையைத் தடுத்தவர்கள் செளதி ஆட்சியாளர்கள். புனித இல்லத்துக்குச் செல்லும் நம்பிக்கைக்குரிய பக்தர்களின் பாதையில் இடையூறு ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுக்காரர்கள். தவறாக வழி நடத்துபவர்கள்" என அயதுல்லா கமேனி செளதியை சாடியுள்ளார்.

"இஸ்லாமிய உலகம் முழுவதும் அந்த ஆட்சியாளர்கள் இழைத்துள்ள குற்றங்களுக்காக, அவர்கள் பொறுப்பில் இருந்து தப்புவதற்கு இஸ்லாமிய உலகம் விட்டுவிடக்கூடாது" என கமேனி வலியுறுத்தியுள்ளார்.

பேச்சுவார்த்தை தோல்வி

ஹஜ் பயணம் தொடர்பாக, கடந்த மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறிப்பாக, ஈரானியர்களுக்கு வழங்கப்படும் விசா மற்றும் விமானச் சேவைகள், அவர்கள் ஹஜ் பயணத்தை நிறைவு செய்ய முடியாத அளவுக்கு உள்ளதாக ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

ஈரானியர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற செளதி தவறிவிட்டதாக ஈரான் கூறுகிறது. ஆனால், அந்தக் கோரிக்கைகள் ஏற்க முடியாதவை என செளதி நிராகரிக்கிறது.

கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் 60 ஆயிரம் ஈரானியர்கள் பங்கேற்றனர். மெக்கா அருகே ஏற்பட்ட நெரிசலில் 400 பேர் கொல்லப்பட்டனர்.

மத்திய கிழக்கில் இரு நாடுகளும் தொடர்ந்து பகைமை பாராட்டி வருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், இரு தரப்புக்கும் இடையிலான தூதரக உறவுகள் முறிந்துவிட்டன. சுன்னி முஸ்லிம்களப் பெரும்பான்மையாகக் கொண்ட செளதியில், ஷியா முஸ்லிம் மதகுரு ஒருவர் தூக்கிலிடப்பட்ட விவகாரத்தை அடுத்தே இந்த முறிவு ஏற்பட்டது.

17 comments:

  1. Anyway 95% of Muslims not welcome the Iranian attemp to involve in holy mosques business. If iranian has problem with Saudi they should take advice from other Muslim countries. As fas as hajj service convern the saudis are providing excellent service. As recent American report indicated that the Iranian are behind in every muslim country's problem in the MEA (middle east and Africa), that seems to be true.

    ReplyDelete
  2. இம்முறை ஹஜ் கடமை கள் அமைதியாக நடக்கும்..

    ReplyDelete
    Replies
    1. இன்ஷா அல்லாஹ். ஆமீன்.

      Delete
  3. If Mecca and Madina are out of bounds for non-Muslims, then why do the Saudi government hesitate to curb majority shiia's from enter these two blessed cities?

    It's the fact that these shiaa's are non-Muslims. So the Saudi authority can enforce a resolution against the shiaas to foil their advancement to Mecca.

    ReplyDelete
  4. ஹஜ் செய்வது முஸ்லிம்களின் கடமை, இதில் இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஷியாக்கள் கருத்துச் சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது.

    ReplyDelete
  5. வரவேற்கத் தக்க கருத்து

    ReplyDelete
  6. No doubt that Saudis are exploiting haj for their own business and they also politicizing this pillar of islam in different ways, Saudis not eligible to run such a huge number of pilgrims.

    ReplyDelete
  7. هارون آدم:
    அடாவடித்தனம் செய்து முஸ்லிம்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கும் ஒரு குழுவினரை தடுத்து நிறுத்தி லட்சக்கணக்காக வணக்கவழிபாடு செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்பது உங்கள் "ஷியா" ப் பார்வையில் குற்றமாகத்தெரிகிறது? அது சரி குறை காணுவதை விட்டு விட்டு மாற்றீடு என்ன செய்யலாம் என்று கூறுங்கள்?

    ReplyDelete
  8. First Mistake in the article is to use the word "Aayathullah" infront of this "Komaini".

    Ayathullah means " Proofs of Allah " But the action of KOMAINY and his people Make SHIRK by equating their IMAAMS to the level of Allah by caling them "MAHSOOM" which means their Imaams "DO NOT MAKE MISTAKE even by Thinking and their Imaams knows When and where they will die"

    The DEEN of Allah brought us by Muhammed (sal) clearly indicates, only Allah pure from defects and only Allah knows Ilm al Haib (hidden knowledge). So this is enough to say that these group is Making Major SHIRK.

    May Allah Guide them in to correct path, if they do not change .. Ya Allah protect our Muslims from their evils and what they have done during the Hajj in history.

    SHIA wnated to chant slogans agains to other groups and people during Hajj, which is not part of Hajj brought to us by Rasoolullah. So Saudi governemnt has told them, They are welcome to Hajj but not for any other acts. BUT these SHIA did not agree for this and they themself took discision to stay away.

    Even today If they agree to come and perform the acts of Hajj, they will be welcome by all Muslims, But if they wanted to additional think that is not related to Hajj.. offcourse they are not welcome

    We go to HAJJ and call "Yaa Allah" But

    They go to HAJJ and call " Yaa Hussain " which is not from an act of Muslim.

    ReplyDelete
  9. There is a BLACKSHEEP here

    ReplyDelete
  10. இது முஸ்லிம்களின் கடமை இதை முஸ்லிம்களாகிய நாங்கள் பார்த்துக் கொள்வோம். இதில் தலையிட ஷீயாக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதுநாள்வரை அவர்களை மக்காவிற்குள் அனுமதித்ததே பெரிய தவறு......

    ReplyDelete
  11. மக்கா,மதீனாவுக்குள் காபிர்கள் நுழைய தடை இருக்கும் போது சியாக்களுக்கும் நுழைய தடை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  12. ஈரான் என்றாலே சிலருக்கு அடிவயிர கலக்க தொடங்கிடும்

    ReplyDelete
  13. யா அல்லாஹ் இந்த புனித தளங்களை முஷ்ரிகுகளிடமிருந்து மீட்டெடுத்து உண்மையான முஸ்லிம்களிடம் ஒப்படைப்பாயாக.

    ReplyDelete
  14. வஹ்ஹாபிசம் நிறைய பத்வா மிஷிங்களைத்தான் உருவாக்கியுள்ளது.

    ReplyDelete
  15. i don't thing other than a Saudy Arabiya can make the Haj arrangement perfectly like now and past. May Allah give more strength to Saydy Arabiya in arranging the Haj.Iran must not handle in Muslim affairs and keep there self away from Muslims.

    ReplyDelete
  16. In the Name of MOHAMED,, But supproting Grave worshippers ?

    ReplyDelete

Powered by Blogger.