Header Ads



ஒலுவில் கடலரிப்பு - அமைச்சரவையில் என்ன நடந்தது..?


-ஒலுவில் கமால் அஹ்மட்-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று புதன்கிழமை -31- ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒலுவில் கடலரிப்பு விடயம் தொடர்பாக அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்தார்.

அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்த  அர்ஜூன ரணதுங்க ஒலுவில் கடலரிப்பு விவகாரத்தினை தடுக்க அமைச்சர் றிசாத் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். இதுகுறித்து என்னுடனும், எனது அதிகாரிகளுடனும் பலதடவை உரையாடினார். அந்த மக்கள் படும் அவலங்களை என்னிடம் ஆதாரங்களாக சமர்ப்பித்தார்

அதன் பயனாக நாம் துரிதமாக செயற்பட்டு இந்த அமைச்சரவை பத்திரத்தை இப்போது சமர்ப்பிக்கிறேன் என்றார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் றிசாத்தை நோக்கி தனது பார்வையை செலுத்தியுள்ளார்.

அமைச்சர் றிசாத் கருத்து தெரிவிக்கையில், 

ஜனாதிபதி அவர்களே ஒலுவில் கடலரிப்பினால் குறித்த பிரதேச முஸ்லிம்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எனது வேண்டுகேபளை செவிமடுத்து உடனடியாக செயற்பட்ட அர்ஜுனா ரணதுங்கவிற்கு ஒலுவில் மக்களின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

இதனையடுத்து   ஒலுவில் கடலரிப்பை தடுக்கு முகமாக தடுப்புக் கற்களை போடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. 

இதுவே நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற்றது.

இதன்போது ரவூப் ஹக்கிம் ஒருவார்த்தைகூட பேசவில்லை.

எனினும் வழமைபோன்று  அமைச்சரவை கூட்டம் முடிந்து வெளியேறிய ரவூப் ஹக்கீம், ஒலுவில் கடலரிப்பை தம்மாலேயே தடுக்கப்பட்டது போன்று தமது விசுவாச ஊடகவியலாளர்களுக்கு பொய் கூறினார்.

இதனை செவிமடுத்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு ஊடகவியலாளர்கள், அந்த பொய்யான தகவலுக்கு மேலும் மெருகூட்டி, ஒலுவில் கடலரிப்பை தடுக்க ரவூப் ஹக்கீமின் முயற்சியால் தடுப்புக்கற்கள் போடப்படுகிறது என இட்டுக்கட்டப்பட்ட தகவலை பரப்பிவிட்டுள்ளார்கள்.

எனினும் அமைச்சரவையில் என்ன நடைபெற்றது, ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் உண்மையிலேயே குரல் கொடுத்தது யார், அதனை அமைச்சரவையில் எழுப்பி, அமைச்சரவையும் அதில் தலையிடச் செய்து, தற்போது தடுப்புக் கற்கள் போடுமளவுக்கு அந்த விவகாரத்தை கையாண்டது யார் என்ற தெளிவான தகவலை எல்லாம் ஒலுவில் மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

அந்தவகையில் ஒலுவில் கடலரிப்பை தடுக்க முழுமூச்சுடன் செயற்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு, ஒலுவில் மக்கள் சார்பில் எமது முழுமையான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

9 comments:

  1. யார் குத்தினாலும் அரிசாகினால் சரி !!!!! ஐயோ இவர்கள் இருவரின் சண்டை எப்பதான் முடியுமோ அல்லாஹ்தான் அறிவான்.

    ReplyDelete
  2. brother not need to mention. we know well that Hakeem is no.1 hypocrite. sri lanka muslims will have a good times when he quit politics.

    ReplyDelete
  3. அரசியல்ல இதல்லாம் சாதாரனமப்பா

    ReplyDelete
  4. யார் குத்தினாலும் அரிசாகினால் சரி! என்ற நிலைப்பாடு மட்டும் போதாது. அது நியாயமும் இல்லை. அரிசாக நெல் குத்தியவனும் குத்தாதவனும் சமனாகவும் முடியாது.உண்மையானவனை இனங்கண்டு சம்பந்தப்பட்ட மக்கள் நன்றிபூர்வமாக இருப்பதுவும் முக்கியம். மக்களை ஏமாற்றுவோரையும் இனங்காண வேண்டும்.

    ReplyDelete
  5. றிசாட்டுக்கு ஜாழ்றா அடிப்பவர்களே இந்த தகவல் உண்மை என நிரூபிக்க முடியுமா?

    ReplyDelete
  6. Mr.Majeed ahamed lebbe your obsolutely correct

    ReplyDelete
  7. i don't know how much this news is correct but
    i don't want to believe Rauf Hakeem After honor M.H.M. Ashraf SLMC Going to very Low Level But i'm Still on SLMC Because We don't want to miss this Party. Oluvil peoples are How many Time They inform Regarding This matter?? After that how many Elections Was Done?? how many time he was in Eastern side ?? i don't know who is Rishad but he Coming to help the community we are happy about that thank you for that DO SOMETHING GOOD FOR PEOPLES YOU WILL BE GET GOOD GIFT FROM ALLAH

    ReplyDelete
  8. Mr. ZIYA

    When i see your comment i can understand you are ஐாழ்றா அடீப்பவா் for hakeem so what different you with others.

    ReplyDelete

Powered by Blogger.