யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட, பெண் பிசாசு கம்பி எண்ணுகிறது
யாழ்.நீர்வேலி பகுதியில் ஆறுவயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய பெண்ணை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட மூன்று பிள்ளைகளையும் சிறுவர் நல காப்பகத்தில் ஒப்படைக்குமாறும், சம்பவம் தொடர்பான வீடியோ காட்சியை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் நீதிமன்ற நீதிபதி அருமைநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
நீர்வேலி பகுதியில் உள்ள தோட்ட காணி ஒன்றில் பெண்ணொருவர் ஆறு வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை கையினாலும் கத்தியினாலும் மிக மோசமாக தாக்கும் காட்சி சமூக தளங்களில் வெளியானதையடுத்து குறித்த பெண் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மூன்று திருமணங்கள் செய்திருப்பதாகவும், மூன்றாவது மனைவி மூலம் மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் அதில் ஒரு சிறமியே இவ்வாறு தாயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
பிசாசு??? Jaffnamuslim என்ன வார்த்தை இது? உங்கள் இணையத்திற்கு ஒரு மரியாதை இருக்கிறது. நீங்களே அதனை பாழாக்கி கொள்ள வேண்டாம்.
ReplyDeleteM NIFRAZ I agree with you.
ReplyDeleteஅது்சரி அது என்ன அந்தப்
பெண்ணின் கணவர் மூன்று திருமணம் முடித்துள்ளாராம்.
My dear Nifras, please refer Holy Quran Sura Annas chapter114. It teaches us to seek refuge from the harms of shaitaan ( devils and evil doers).where are these elements from? the soora again describes that they are from jinns and humanbeings. I expect your reply.
ReplyDeleteமுஸ்லிம்கல் மூன்று திருமனம் முடித்தால்தான் பிரற்ச்சினை அடுத்தவர்கலுக்கு எத்தனை திருமனம்முடித்தாலும் பிரச்சினையில்லை
ReplyDelete