Header Ads



வலைவீசும் முயற்சியில் மைத்திரியும், ரணிலும் தீவிரம்..!!

தமது கட்சியை பலமான முறையில் மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிளவுபட்டு கூட்டு எதிர்க்கட்சியாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு போட்டியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பெருமளவான உறுப்பினர்கள், அப்போதைய மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து கொண்டனர்.

எனினும் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சி பலமடைந்து ஆட்சியில் உள்ள நிலையில், கட்சி மாறி சென்றவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள முயன்ற போதும், தலைவரான ரணில் கடுமையான போக்கினை கடைப்பிடித்திருந்தார்.

எனினும் தற்போது அரசியல் ரீதியாக தீவிர போட்டிதன்மை ஏற்பட்டுள்ளமையால், மஹிந்த அணியிலுள்ளவர்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சிக்கு ரணில் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கை சின்னத்தில் போட்டியிடும் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பினை தொடர்ந்து சாதகமான நிலைகள் காணப்படுவதாக தெரிய வருகிறது.

எதிர்வரும் வரவு செலவு திட்ட விவாதத்தின் போது தமக்கான உறுப்பினர்களை தம்பக்கம் இழுத்துக் கொள்ளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிய வருகிறது.

No comments

Powered by Blogger.