Header Ads



முஸ்லிம்கள் பற்றி வாய்பந்தல் போடுவதை மோடி நிறுத்திவிட்டு, முன்னேற்ற திட்டங்களை வகுக்க வேண்டும்


இரு தினங்களுக்கு முன்பு கேரளாவில் நடைபெற்ற பாஜக வின் தேசிய செயர்குழுவில் பேசிய மோடி முஸ்லிம்கள் பற்றி வாய்கிழிய பேசினார்

முஸ்லிம்களை அரசியல் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன் படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய மோடி முஸ்லிம்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்றும் அவர்களின்முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்றும் வாய் பந்தல் போட்டார்

வழிவகுக்க வேண்டிய இடத்தில் இருப்பவரே வழிவகுக்க வேண்டும் என்று எதிர் கட்சி தலைவர் போல் பேசுவதில் இருந்தே மோடியின் பித்தலாட்டத்தை புரிந்து கொள்ளலாம்

இது பற்றி இன்று -28-  செய்தியாளர்களை சந்தித்த அஸதுத்தீன் உவைசி

முஸ்லிம்கள் முன்னேற்றம் பற்றி வாய்பந்தல் போடுவதை மோடி நிறுத்திவிட்டு முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்

No comments

Powered by Blogger.