மர்மங்கள் வெளிவர கனடாவுக்கு போன, தாஜுத்தீனின் படுகொலை காட்சிகளில் ஏமாற்றம்
-விடிவெள்ளி MFM.Fazeer-
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் மர்மங்களைத் துலக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு கனடாவுக்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்சிகள் ஊடாக தெளிவான எந்த முடிவுக்கும் வரமுடியாது என பிரிடிஷ் கொலம்பியா ஆய்வு நிறுவனம் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அறிவித்துள்ளது.
குறித்த சீ.சீ.ரி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் பயணிக்கும் வாகனங்களின் இலக்கங்களையோ அல்லது அதனுள் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை அல்லது நபர்கள் யார் என்பதையோ தெளிவாகக் கண்டறிய முடியாதுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
சீ.சீ.ரி.வி. ஆய்வுகள் தொடர்பில் forensic video and surveillance technology laboratory british columbia institute of technology – canada நிறுவனத்தின் நிக்ழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி டேவிட் மெக்கே கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸுக்கு அனுப்பி வைத்துள்ள சுருக்கமான அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பீ 849/12/03 எனும் வழக்கு தொடர்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி காலை 10.15 மணிக்கு தமக்கு கிடைக்கப் பெற்ற சீ.சீ.ரி.வி. காட்சிகளின் ஆய்வுகளின் முடிவின் சுருக்க அறிக்கையாக அந்த அறிக்கையை வழங்குவதாக குறிப்பிட்டே மேற்படி அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 3 ஆம் இலக்க நீதிவான் நீதி மன்றினால் அனுப்பட்ட சீ.சீ.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவெட்டுக்களும் அது தொடர்பிலான கேள்விக்கொத்தும் இரு பொலிஸ் அதிகாரிகள் ஊடாக தமக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதன் பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் தெளிவான தீர்மானங்களைப் பெற முடியவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகனத்தின் இலக்கத்தகடு மற்றும் அதில் உள்ள நபர்கள் தொடர்பில் குறித்த கேள்விக்கொத்தில் கோரப்பட்டிருந்த போதும் அது குறித்து முடிவெடுக்க முடியாது என குறிப்பிட்டு அதற்கான காரணங்களாக 5 விடயங்களையும் குறித்த ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த வீடியோ காட்சிகள் மிக தரம் குறைந்ததாக இருப்பதாகவும், ஆய்வுகளுக்கு அனுப்புவதற்காக சேமிப்பகங்களில் குறித்த வீடியோ காணொளிகள் சுருக்கப்பட்டு பதிவு செய்யப்படும் போது, உண்மை சீ.சீ.ரி.வி. காட்சிகள் என நம்பப்படும் குறித்த காட்சிகள் மாற்றமடைந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், ஹெட் லைட் மற்றும் பாதையோர மின் குமிழ்களின் வெளிச்சத்துக்கு மத்தியில் கமராக்களில் வாகனங்களின் இலக்கம் தொடர்பில் தெளிவான பதிவுகள் இல்லை எனவும் காட்சிகள் தரம் குறைந்ததாக உள்ள நிலையில் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு அப்பால் (வாகனத்தின் உள்ளே) இருப்பவர்கள் தொடர்பிலும் முடிவெடுக்க முடியாது எனவும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அதிகாலை நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலிகா மைதானத்தின் மதிலுடன் மோதிய நிலையில் எரிந்துகொண்டிருந்த காருக்குள் இருந்து வஸீம் தாஜுதீன் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது அவரது மரணம் படுகொலை என நீதிமன்றம் தீர்மானித்துள்ள நிலையில் விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தட்டிக்கேட்டு உண்மையை கண்டறிய முடியாமல் தடமாருவதால் இவ்வாறான ஆய்வுகள் தேவைப்படுகிறது.ஏனைய கொலைக்குற்றவாளிகள் அனைவரிடத்திலும் தட்ட வேண்டிய இடத்தில் தட்டிக்கேட்டதால் உண்மைகளை கண்டறிய முடிந்தது இந்த வழக்கில் மட்டும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் CCTV கமாராக்களை ஆய்வு செய்து குற்ற வாளிகளை கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டுள்ளது அவ்வாறு செய்தும் உண்மையான குற்ற வாளிகளை கண்டு பிடிக்க முடிய வில்லை என்பதுதான் மன வேதனை.கடந்த காலங்களில் குடவாளி இல்லாதவனை தட்டின தட்டில் குடவாளி நான்தான் என்று சொல்லிமலவுக்கு இலங்கை நாறியது அதன் பிறகு அவன் இல்லை என்ற முடிவு வருகிறது.ஆனால், இந்த வழக்கில் உண்மையான குற்ற வாளிகள் கண் முன்னே தெரிந்தும் தண்டிக்க முடியாமல் தத்தளிக்கும் போலிசும், நீதிமன்றமும், அரசும்.காரணம் பணம்,பட்டம்,பதவிகள் தடையாக இருக்குறது.ஏழைக்கு ஒரு நீதி பணக்காரனுக்கு ஒரு நீதி.எல்லா நீதிபதிக்கலாம் பெரிய நீதிபதி சரியானா நீதியை வழங்கும் காலம் வெகு தூர்சத்தில் இல்லை.
ReplyDeleteyou are correct
DeleteReally true
ReplyDeletewright brooooo
ReplyDelete