ஸ்ரெலிங் பவுண்டுக்கு, எதிராக இலங்கை ரூபா
ஸ்ரெலிங் பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் வாராந்த பொருளாதார ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டின் செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஸ்டெலிங் பவுண்டுகளை விட இலங்கை ரூபா 10.6 வீதம் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்துள்ள நிலையில், அதன் நாணயத்தின் பெறுமதி கடுமையாக பாதிப்படைத்துள்ளது.
இதன்மூலம் ஐரோப்பியா நாடுகளுக்கிடையிலான வர்த்தக நடவடிக்கையிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேவேளை மற்றைய நாட்டு நாணயங்களின் பெறுமதிகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment