அஷ்ரப், அல்குர்ஆன் ஆய்வுமையம் நடாத்திய, கிராஅத் போட்டியின் முடிவுகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் 'அழகிய தொனியில் அல்குர்ஆன்' என்ற தலைப்பில் கடந்த ஞாயிறு, திங்கட் கிழமைகளில் கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் நடாத்திய, அகில இலங்கை ரீதியான கிராஅத் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் பின்வருமாறு
20 வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண்கள் :
முதலாம் இடம் : ஹஸன் ஷாஸுலி, மத்ரஸத்துத் தௌஹீத் (அ.இ.தௌ.ஜ) கொழும்பு 09
இரண்டாம் இடம் : முஹம்மத் அக்பல் முஹம்மத் மொஹிதீன், தம்பாளை, பொலன்னறுவை
மூன்றாம் இடம் : துவான் ஜமால் முஹம்மத், அல் ஹக்கானிய்யா அரபுக் கல்லூரி, கண்டி
20 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்:
முதலாம் இடம் : முஹம்மத் யூஸுப் முஹம்மத், தெல்கந்த நுகேகொட
இரண்டாம் இடம் : அதீகுர் ரஹ்மான் முஹம்மத் முக்தார், கேகாலை
மூன்றாம் இடம் : பஸுலுல் ரஹ்மான் முஹம்மத் முக்தார், கேகாலை
சர்வதேச போட்டியில் பங்குபற்றிய ஆண்கள்:
முதலாம் இடம் : முஹம்மத் ரஷாத் சிம்சியான், அக்குரணை, கண்டி
இரண்டாம் இடம் : முஹம்மத் நவ்ஸர் முஹம்மத் ஹிஷாம், மத்ரஸத்துல் தௌஹீத் (அ.இ.தௌ.ஜ) கொழும்பு – 09
மூன்றாம் இடம் : முஹம்மத் இப்ராஹீம் முஹம்மத் சரூப், கல்பானுவ, நிக்கவரெட்டிய
20 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்கள்:
முதலாம் இடம் : நுஹா நுஹுமான், மத்ரஸத்துல் ஹுதா, வெல்லம்பிட்டி
இரண்டாம் இடம் : பாத்திமா ஹஸானா நவ்ஸர், மத்ரஸத்துல் தௌஹீத் (அ.இ.தௌ.ஜ) கொழும்பு 09
மூன்றாம் இடம் : ஹஸீபா நுஹுமான், மத்ரஸத்துல் ஹுதா, வெல்;லம்பிட்டி
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்:
முதலாம் இடம் : வஸ்னி முஹம்மத் அமல், தாருல் தக்வா, ஹிப்ல் தஃலீமுல் குர்ஆன் மத்ரஸா, கொழும்பு
இரண்டாம் இடம் : நபீஸா பயாஸ், கொழும்பு
மூன்றாம் இடம் : சாஜிதா பாரூக், கல்-எலிய
சர்வதேச போட்டியில் பங்குபற்றிய பெண்கள்:
முதலாம் இடம் : ஸக்கியா ஹஸ்னா அப்துல் ஜப்பார், கல்ஹின்ன, கண்டி
இரண்டாம் இடம் : முப்லிஹா முஹம்மத் செயினுதீன், காலி
மூன்றாம் இடம் : பாத்திமா ரம்ஸா ஹிதாயத்துல்லாஹ், கொழும்பு
இவர்களைத் தவிர ஆறுதல் பரிசுகளுக்குரியவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நாடெங்கிலும் இருந்து வந்திருந்த 400 பேர் வரையிலான ஆண் போட்டியாளர்களும், 250 பேர் வரையிலான பெண் போட்டியாளர்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடுவர்கள் முன்னிலையில் இனிமையான தொனியில் அல்குர்ஆன் வசனங்களை ஓதிக் காண்பித்தனர். பெண் காரியாக்கள் சிலரும் போட்டி நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.
வெற்றிபெற்றவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மறைந்த தினமான செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதியன்று கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடைபெறவுள்ள பிரதான நிகழ்வின் போது பெறுமதி வாய்ந்த பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் அல்குர்ஆனை இனிமையாக ஓதும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
போட்டி முடிவுகளை உறுதிப்படுத்தியோர்:
ஹாபிழ், காரி முஹம்மத் யுஸ்ரி சுபைர்
பணிப்பாளர் - தாருல் தக்வா கலாபீடம்
ஹாபிழ், காரி முஹம்மத் ரிப்ராஸ் ராஸிக் (அல்-அஸ்ஹரி)
அதிபர் - தாருல் தக்வா கலாபீடம்
Post a Comment