குடிநீருக்கான தட்டுப்பாடு, ஏற்படும் அபாயம்
இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கான தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி பொதுமக்களை தேசிய நீர்வடிகாலமைப்பு மற்றும் நீர்வள சபை கேட்டுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் நீர் பாவனைக்கு சமகால வறட்சியான காலநிலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி நீர் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சில பிரதேசங்களுக்கு 24 மணி நேரமும் நீரை விநியோகிக்க முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே திரு.அன்சார் இந்த தகவல்களை வெளியிட்டார்.
வறட்சியான பிரதேசங்களுக்கு பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமென்று அவர் மக்களைக் கேட்டுள்ளார். வறட்சியான காலநிலை காரணமாக நீரின் தேவைப்பாடு 15 வீதம் அதிகரித்துள்ளது.
குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் 30 வீதத்தால் குறைவடைந்ததாக இங்கு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவித்தார்.
Post a Comment