Header Ads



தந்தையிடம் அறிவுரை கேளுங்கள் சஷீ - நாமல் தம்பி போல அவசரப்பட வேண்டாம்..!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை போல் அவசரப்பட்டு வார்த்தைகளை வெளியிட்டு தவறிழைக்க வேண்டாம் என ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, சஷீந்திர ராஜபக்சவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஷீந்திர எனது தம்பியை போன்றவர். சஷீ தயவு செய்து தந்தையிடம் அறிவுரை கேளுங்கள். நாமல் தம்பியை போல் அவசரப்பட்டு வார்த்தைகளை வெளியிட வேண்டாம்.

நாட்டின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச என் தந்தையிடம் அறிவுரைகளை பெற்று, தேவையானால் ஆலோசனைகளுக்கும் அப்பால் சென்று மகன் என்ற வகையில் தந்தையிடம் தண்டனை பெற்று கட்சியை எப்படி நடத்தி செல்வது என்பதை கற்றுக்கொள்ளுமாறு நான் சஷீந்திர ராஜபக்சவிற்கு ஆலோசனை வழங்குகிறேன்.

சமல் ராஜபக்க கட்சியை பெரிதாக நேசிக்கும் கட்சியை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டத்தில் முன்னணியில் இருக்கும் அன்பான தலைவர்.

கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் ஏனையோர் எப்படி நடந்து கொண்டாலும் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் சமல் ராஜபக்ச நடந்து கொண்ட விதமானது கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை காட்டுகிறது.

உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இதனையே கேட்கின்றனர். இதனால், சஷீந்திர ராஜபக்ச வீட்டில் தந்தையிடம் ஆலோசனை பெற்றால் நல்லது.

அவசரப்பட்ட தம்பி நாமலை போல் வார்த்தைகளை வெளியிட வேண்டாம் என டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Only paksa paksa not consideting about country.foolish and selfish politician

    ReplyDelete

Powered by Blogger.