இந்த பாட்டிக்கு இருக்கும் நம்பிக்கை, நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும்..?
-Peershahul Hameed-
இந்த பாட்டி என்னிடம் கூனிக்குருகி வந்து தம்பி முடக்கத்தான் கீரை வாங்கிக்க தம்பின்னு சொல்லி கீரையை நீட்டினார்.
எவ்வளவு என்றேன் ஒரு கட்டு 30 ரூபாய் எனவும் இரண்டு கட்டு இருக்கு என்றார்.
இரண்டு கட்டையையும் வாங்கி கொண்டு 100 ரூபாய் கொடுத்தேன், சில்லறை இல்லையே தம்பி என்றார்.
மீதியை நீங்களே வச்சிக்கங்க பாட்டி என நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்து சுருக்கு பையில் இருந்த கசங்கிய ரூபாய் நோட்டுக்களை கை நடுக்கத்தோடு எண்ணி மீதியை மளிகை கடைக்காரரிடம் வாங்கி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், வாழ்த்திவிட்டு கீரை விற்ற மகிழ்ச்சியோடு நடந்து சென்றார்.
தள்ளாத வயதிலும் எங்கோ கரும்பு காட்டில் பிடிங்கி அதை வியாபாரம் செய்து வாழும் இந்த பாட்டிக்கு இருக்கும் நம்பிக்கை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பது ஐயமே!!!
உண்மைதான் எமது சமூகத்தில் எத்தனையோ மிகவும் ஆரோக்கியமான ஆண்கள் மட்டுமன்றி பெண்கள் தமது (?) குழந்தைகளுடன் சனிக்கிழமைகளில் (நோன்பு காலத்தில் விசேடமாக) கிழக்கில் பெரும்பாலான பகுதிகளில் கொஞ்சம் கூட வெட்க உணர்வின்றி கையேந்துகிறார்கள். கொடுப்பவர்களில் எத்தனை பேர் மனம் கோணாது கொடுக்கிறார்கள் என யாரும் நினைப்பதில்லை.
ReplyDeleteஇவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் (70%) மடடக்களப்பு மாவட்ட பெரிய முஸ்லீம் கிராமங்களில் இருந்து வருவதை இங்கு குறிப்பிடுவதற்கு மன்னிக்க வேண்டும் ஆனால் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் அவ்வூர்களில் பெரும் பணம் படைத்த தனவந்தர்கள், ஸகாத் நிதியம் மற்றும் இன்னோரன்ன சமூக அமைப்புக்கள் இருந்தும் இவ்வாறானவர்கள் கவனிக்கப்படவில்லையா அல்லது வேறு காரணமா என்பதை குறித்த ஊர்களின் தலைமைத்துவங்கள் கடடாயம் கருத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும்.
பரவணி
ReplyDelete