அஷ்ரப் மரணிக்கவில்லை, தொலைந்திருக்கிறார்..!
இன்றிருக்கும் அரசியல் வாதிகளில் பாதிப்பேர் மரணித்துவிட்டு வெறுமென நாக்கை பணம்,புகழுக்காய் நீட்டிக்கொண்டும், இன்னும் சிலர் நரை கிழங்களாக பெட்டில் படுத்துக்கொண்டு சாணக்கிய வார்த்தைகளை முனுமுனுத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு பின்னால் படிக்காத பாமரன் தான் கொடி பிடிக்கிறான் என்று பார்த்தால் முன் வரிசையில் நிற்கின்ற பட்டங்களைப்பாருங்கள். கொந்தராத்துக்கும், அடுத்த அரசியல் அந்தஸ்துக்கும், தன் மணவாட்டியைக்கூட விற்கும் நிலையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒரு அரசியல்வாதியின் பலமே தன்னுடைய வரலாறை தன் கச்சைக்குள் மறைத்துக்கொள்வது தான்.
ஒரு போராளியின் தோல்வியும் அதிலிருந்து தான் ஆரம்பமாகிறது.
இன்றளவும் முஸ்லிம் கட்சிக்கான பலமிருந்தும் எதுவும் பிடுங்க முடியாமல் இருப்பது தனித் துரோகம் ஒன்றால் தானே அதையும் மறந்து போனோம். அது யாரால் என்பதும் மறந்து போனோம்.
சாணக்கியமாக முடிவெடுக்கிறோம் என்று மக்களை ஏமாற்றும் பெயருக்கு டிசைனாக பேர் வைக்க கற்றுக்கொண்ட சமூகமாகத்தான் நம்மை இன்று முஸ்லிம் காங்கிரஸ் மாற்றி வைத்திருக்கிறது..
நோகமல் நொங்கு தின்ன இருக்கும் தொழில் லிஸ்டில் இருக்கிறது இன்றைய அரசியல். அன்று அஷ்ரஃப் சாரன் விற்கப்போயிருந்தால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒன்றே இருந்திருக்காது. அந்த இளைஞனை தடுத்திருந்தால் நமக்கு விடியலே பிறந்திருக்காது.
ஆனால் இன்றைய அரசியல்வாதியாகும் ஆசை கொண்ட இளைஞர்கள் தேடலையும், சிந்தனையையும், அவர்கள் வேண்டுவதையும் தேடிப்பாருங்கள். எல்லாமே பூச்சியத்துக்கு சமமாகி இருக்கும்.
அது தான் இன்றைய அரசியல் களநிலவரம்; கள்ளுக்கொடுத்து சமூகத்தை மப்புக்குள் கிடத்தியிருக்கும் நிலை. அஷ்ரஃபை மிஞ்சும் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களைத் தேடுவதில் தான் துவண்டு போயிருக்கிறோம்.
ஆனால் அஷ்ரஃபை விட வீரியமாக முளைப்பார்கள் என்று நம்புகிறேன் இன்ஷா அல்லாஹ்.
அஷ்ரஃபின் துடிப்பும், தூரசிந்தனையையும் நரைத்த கிழங்களுக்கு மட்டுமே தான் உண்டென்று நினைத்து நினைத்து சாகும் சமூகமே! உனக்கு அஷ்ரஃப் வேண்டுமானால் சிந்தனைமிக்க இளைஞர் கூட்டத்தில் தேடு, அஷ்ரஃபை விட
தேறிய முத்துக்கள் எத்தனையோ கிடக்கிறது.
இன்னும் குருட்டு மூதேவியாகத்தான் இருக்கப் போகிறாயா என் பாவப்பட்ட சமூகமே?
"இளையோர் கூட்டம் தலமை தாங்கும் பூமியே புதிய பூமி" என்று நம்பிக்கை கொண்ட
-எம்.எம்.மத்தீன்-
தங்க முலாம் பூசப்பட்ட பிரதேசவாத சிந்தனை
ReplyDelete