சிரியாவில் ஊசலாடும் யுத்தநிறுத்தம்
கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் சிரியாவின் அரச படைகள் மீது கிளர்ச்சியாளர்களின் ஐம்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளது, சிரியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என்று ரஷிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிரியாவில் நிலைமை மோசமடைந்து வருகிறது என்று ரஷிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மூத்த ரஷிய ஜெனரல் விக்டர் போஸ்னிஃஹிர் போர், அமெரிக்கா வகுத்தளித்த பலவீனமான ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில், தனது தரப்பு கடமையை செய்வதில் தோல்வி அடைந்து விட்டது என்று குற்றம் சாட்டினார். மேலும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்தால், பொறுப்பை அமெரிக்கா ஏற்க வேண்டும் என அவர் எச்சரித்தார் .
வெள்ளியன்று, முற்றுகையிட்ட சிரியா நகரங்களில் உதவி வாகனங்கள் செல்ல அனுமதிக்க அசாத் அரசாங்கத்தின் மீது ரஷியா அழுத்தம் தரவில்லை என அமெரிக்கா குற்றம் சுமத்தியது.
Post a Comment